ஆபிரகாம் லிங்கன் பற்றிய ஒரு பார்வை
நீ எதுவாக மாற விரும்புகிறாயோ? அதுவாக மாறுவாய் என்பது ஆபிரகாம் லிங்கனுக்கு மட்டுமல்ல. நம்பிக்கையைத் தளர விடாமல் லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும், ஒவ்வொருவருக்கும் இது வெற்றி திருமந்திரம்! ஆக உள்ளன. ஆபிரகாம் லிங்கன் தோல்விகளின் செல்லக்குழந்தை என்று சொல்லலாம்.
- ஆபிரகாம் லிங்கன் தோல்விகளின் செல்லக்குழந்தை என்று சொல்லலாம்.
- இவர் பிறந்த உடனே தாயை இழந்தார்.
- லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா.
அதிர்ச்சி அடைந்த ஆபிரகாம்
அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் 1809 ஆம் ஆண்டு பிறந்தார் ஆபிரகாம். இவர் பிறந்த உடனே தாயை இழந்தார். சிறு வயதில் ஒரு கடையில் வேலைப் பார்த்து கொண்டு, இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை படித்து வந்தார். இளைஞன் ஆகி பக்கத்து நகருக்கு போன போது, வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
படுதோல்வி அடைந்த ஆபிரகாம் லிங்கன்
ஏனென்றால் அடிமைகளை வியாபாரம் செய்யும் மனித சந்தை அது. கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும், காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டு ரத்தம் சூடேற லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும். அவசரமாக தனது 22 வயதில் நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி படுதோல்வி அடைந்தார்.
லிங்கனை ஒரு போராளியாக மாற்றிய வளர்ப்புத் தாய்
இந்த நேரத்தில் சொந்தமாகத் தொழில் தொடங்கி அதிலும் பெரும் கடனாளியாக மாறியிருந்தார். சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா. ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டுமென்றால் ஆசைப்படுவதை பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக் கொள். ‘நீ எதுவாக விரும்புகிறாயோ? அதுவாக மாறுவாய்’ என்றார் சாரா. பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள். இப்போது லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தன.
மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத் தானே ஒழிக்க முடியும். ஆக முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும். சட்டப்படிப்பு உடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பை பற்றி ஊர் ஊராக கூட்டம் போட்டு பேச தொடங்கினார்.
பல பதவிக்கு போட்டியிட்ட லிங்கன்
ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு 1834 இல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உப ஜனாதிபதி என பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டார். சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.
லிங்கன் இல்-வாழ்க்கை தோல்வி
எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே மாறினார். இல்- வாழ்க்கையிலும் அவருக்கு தோல்விகள் தழுவின. 1835 இல் தனது காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33 வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தது. மூன்று குழந்தைகளும் சிறு வயதிலேயே மரணமடைந்தனர். மனைவிக்கு மனநோய் இருந்தன. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர் கொண்டதால் தான் லிங்கன் வெற்றி பெற முடிந்தது.
ஜனாதிபதி ஆன லிங்கன்
அமெரிக்க ஜனாதிபதி ஆனார். அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்தார். மாகாணங்களை ஒன்று சேர்த்து அமெரிக்காவைத் தலை நிமிர வைத்தார். லிங்கன் அந்த சாதனையால் தான் அடுத்த முறையும் அவரை மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1765 இல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்த போது, ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணமடைந்தார்.
லிங்கன் சாதனையாளர்
லிங்கன் நீ எதுவாக மாற விரும்புகிறாயோ? அதுவாக மாறுவாய். நம்பிக்கையைத் தளரவிடாமல் லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் ஒவ்வொருவருக்கும் வெற்றி திருமந்திரம் ஆக உள்ளது. லிங்கன் சிறுவயது முதல் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே வந்த போதிலும் பல இன்னல்களுக்கு இடையிலும் சாதனை படைத்துள்ளார். வெற்றிக்காக போராடும் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட சாதனையாளர்களின் வரலாறை தெரிந்து விடா முயற்சியுடன் போராடி ஜெயிக்கலாம்.