ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

விரதம் இருக்கும் தினங்களும் அதனால் கிடைக்கும் பலன்களும் என்ன பார்க்கலாம்!!

விரதம் என்பது இந்திய கலாச்சாரத்தில் மக்களின் இன்றியமையாத ஒரு பாரம்பரிய முறையாக கருதப்படுகிறது. உணவு உண்ணாமல் இறைவனின் முழு சிந்தனையுடன் ஒன்றை நினைத்து மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஐம்புலன்களையும் அடக்கி இருக்கும் முறையை விரதம் என்று அழைக்கப்படுகிறது. விரதம் என்பதற்கு இறைவன் அருகே வசித்தல் என்பதும் பொருள் தரும் வேறு எந்த சிந்தனையும் என்று இறைவனுக்காக நாம் செய்யும் மிகப்பெரிய தவமாக விரதத்தை எடுத்துக் கொள்ளலாம்.

உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல.
எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ‘விரதம்’
என்கிறார் ரமணர்.

விரதம் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என அனைத்து மதத்திலும் கடைபிடிக்கப்படுகிறது அதன் பெயர்கள் தான் ஒவ்வொரு மத வழிக்கு ஏற்ப மாறி உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் விரதம் இருக்கின்றனர் ஒவ்வொரு தெய்வத்தை நினைத்து, மனதில் ஒவ்வொரு வேண்டுதலை வரமாக கேட்டு விரதம் இருக்கின்றனர். ஒவ்வொரு நாளில் விரதம் இருப்பது ஒவ்வொரு பலனை தேடித்தரும் எனவே எந்த நாளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் விரதம் இருங்கள் இந்த பதிவில் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்களையும் எந்த நாளில் நாம் விரதம் இருக்க வேண்டும் என்று ஒரு சிறிய குறிப்பையும் பார்க்கலாம்.

விரதம் இருக்கும் தினங்களும் அதன் பலன்களும்

பிரதோஷம்

சிவனுக்கு உகந்த நாளான பிரதோஷ தினத்தன்று விரதம் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும் துன்பங்கள் மன உளைச்சல் நீங்கி நிம்மதியான வாழ்வு வாழ வழிவகுக்கும்.

மகா சிவராத்திரி

சிவபெருமானை வணங்குவதற்கு ஏற்ற நாளான மகா சிவராத்திரி என்று விரதம் இருப்பவர்களுக்கு சகல நன்மைகளும் வந்து சேரும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

சங்கடஹர சதுர்த்தி

விநாயகர் பெருமானை வணங்க மாதம் மாதம் வரும் சங்கடஹரா சதுர்த்தி அன்று விரதம் மேற்கொள்பவர்களுக்கு சங்கடங்கள் நீங்கி நினைத்த காரியம் நிறைவேறும். நீங்கள் ஒரு காரியத்தை நீண்ட நாட்களாக நினைத்து தடைப்பட்டு இருந்தால் தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்.

விநாயகர் சதுர்த்தி

வருடத்தில் ஒரு முறை வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு மிக விசேஷமான நாளாக கருதப்படுகிறது அன்றைய தினத்தில் நீங்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டு வணங்கும் பொழுது உங்களது முன்வினை பாவங்கள் நீங்கும்.

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் தினத்தன்று விரதம் இருந்து வழிபட நீங்கள் நீண்ட நாள் மனதில் நினைத்த காரியம் நீங்கள் எதிர்பார்த்ததை விட சுபமாக முடியும்.

கந்த சஷ்டி

முருகப்பெருமானின் விசேஷ நாளான கந்த சஷ்டி தினத்தன்று விரதம் இருப்பவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் நீங்கள் மாதம் வரும் கந்த சஷ்டி தினத்தன்று விரதம் மேற்கொள்ளலாம் அல்லது வருடத்தில் ஒருமுறை வரும் மகா காந்த சஷ்டி விழா அன்று விரதம் இருந்து முருகனின் திருக்கல்யாணத்தை பார்த்து வணங்கும் பொழுது அடுத்த வருடத்திற்குள் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வரலட்சுமி விரதம்

பெண்கள் அதிகமாக இருக்கும் விரதமான வரலட்சுமி விரதம் இருக்கும் பொழுது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் மேலும் திருமணம் ஆகாத பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கும் பொழுது நல்ல வாழ்க்கை துணை அமையும்.

வைகுண்ட ஏகாதசி

பெருமாளுக்கு உகந்த தினமான வைகுண்ட ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று விரதத்தை முடித்து அவரை நினைத்து வணங்கும் பொழுது மோட்சம் கிடைக்கும்.

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண பரமாத்மாவின் கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபடும்பொழுது அந்த கிருஷ்ணரை நமது வீட்டிற்கு அன்றைய தினம் வருவார் என்பது ஐதீகம் அவ்வாறு நாம் விரதம் இருந்து வணங்கும் பொழுது நமது வீட்டில் செல்வம் பெருகும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கிருஷ்ணரே குழந்தையாக வந்து பிறப்பார்.

பௌர்ணமி விரதம்

மாதம் மாதம் வரும் பௌர்ணமி தினத்தன்று விரதம் இருந்து உங்கள் குல தெய்வத்தை அல்லது உங்கள் விருப்ப தெய்வத்தை நினைத்து வணங்கும் பொழுது வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும் மேலும் தீராத நோய்களும் சேர்ந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

திருவோணம்

திருவோணம் தினத்தன்று விரதம் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை நினைத்து மகிழ்ச்சி உண்டாகும் குடும்பத்தில் உள்ள அனைவரும் இருவரும் ஒருவர் அன்பாக இருப்பார் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *