ஓரைகளை பற்றி அறிந்து கொள்ளுவோம்..!!
செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் 7 வரை செவ்வாய் ஓரை. இதே போன்று வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணி வரை சுக்கிர ஓரை. இந்த ஓரைகளில் வாரம் வாரம் தவறாமல் பெண்கள் காலை எழுந்ததும் குளித்து விட்டு பூஜையறையில் பூஜை செய்வதால் நம் உடல் ஆரோக்கியமும், நம் வீட்டில் செல்வ நிலையும் உயரும்.
செவ்வாய் ஓரை
செவ்வாய் கிரகம் நம் உடலின் ஆரோக்கியத்தை தருபவர். இதனால் இவரை செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் செவ்வாய் ஓரையில் வணங்குவதால் செவ்வாய் பகவானின் அருள் நமக்குக் கிடைக்கும். செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் முருகப்பெருமாள். இவரை செவ்வாய்க் கிழமைகளில் வணங்கி வரலாம்.
முருகனுக்கு உரிய கந்த சஷ்டி படிப்பதால் முருகனின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். செவ்வாய்க் கிழமைகளில் சிவப்பு நிறம், செவ்வாய் கிரகத்திற்கு உரியது. அதனால் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை சிவப்பு ஆடைகளை உடுத்துவது நல்லது. இது செவ்வாய் கிரகத்தின் அனுகூலத்தை பெற்றுத் தரும். செவ்வாய் ஓரையான காலை 6 – 7 துவரம் பருப்பை தானம் செய்யலாம்.
அன்றைய தினத்தில் சிவப்பு நிறமான அரளிப் பூவை மாலையாக துர்க்கைக்கும், முருகப்பெருமானுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும், சாற்றி வழிபடுவது மிகுந்த பலனை தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நோய் நொடிகள் தீரும்.
சுக்ர ஓரை
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் அதாவது காலை 6 முதல் 7 மணிக்குள். இந்த ஒரு மணி நேரம் சுக்கிர ஓரை ஆகும். இந்த ஓரையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் காலை 6 – 7 தவறாமல் வீட்டிலோ அல்லது கோவிலுக்கு சென்றோ அம்மனையும், சுக்கிர பகவானையும், நவக்கிரகங்களில் உள்ள சுக்கிரன், வழிபட்டு வருவதால் செல்வ வளம் கூடும். தொழிலில் உள்ள பிரச்சனைகள் தீரும். நல்ல வேலை கிடைக்கும்.
உங்களின் ஆளுமை தன்மை அதிகரிக்கும். அதாவது நீங்கள் அதிகார பதவியில் இருப்பார்கள். இவற்றை சுக்கிர பகவான் நமக்கு அருளுவார். இதனால் ஒவ்வொரு வாரமும், வெள்ளிக் கிழமைகளில் வருகின்ற சுக்கிர ஓரை பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். இவற்றை ஒவ்வொருவரும் தவறாமல் கடைப்பிடிப்பதால் நமக்கு நல்ல நிலைமையை சுக்ரபகவான் தந்தருள்வார்.
இந்த சுக்கிர ஓரையில் உப்பு, அரிசி, சர்க்கரை, மஞ்சள் தூள், தானியங்கள் வாங்கலாம். வீட்டிற்கு தேவையானவற்றை இந்த நேரத்தில் வாங்குவதால் வீட்டில் தனம் தானியங்கள் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் வீட்டிற்கு தேவையான இந்த பொருட்களை, இந்த நேரத்தில் வாங்குவதால் மென் மேலும் இப்பொருட்கள் சேரும். வெள்ளிக்கிழமைகளில் இந்த 6-7 இப்பொருட்களை வாங்குவதும், சுக்கிர பகவானை வழிபடுவதும், நன்மையை கொடுக்கும்.
வீட்டில் இருப்பவர்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும் குடும்பத் தலைவி காலை எழுந்ததும் காலைக் கடனை முடித்து விட்டு, குளித்துவிட்டு பூஜை அறையில் இந்த பூஜையைச் செய்யலாம். இதனால் தவறு ஏதும் கிடையாது. பூஜை முடிந்ததும் உங்கள் காலை வேலைகளை தொடர்ந்து செய்ய ஆரம்பிக்கலாம்.