ஆரோக்கியத்திற்கு ஏற்ற மஞ்சள் நிறம்
நாம் உண்ணும் உணவில் பல நிறங்கள் அடங்கிய காய்கறிகள் இருந்தாலும் மஞ்சள் நிறம் காய், கனிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. வாழைப்பழம், மாம்பழம், பைனாப்பிள், எலுமிச்சை, பரங்கிக்காய் இப்படி நிறைய காய்கனிகள் உண்டு. எலுமிச்சை சாறு தொடர்ந்து அருந்தி வருவதால் மற்ற நோய்களுக்கு விரைவில் விடை கொடுத்து விடலாம். எல்லா காலத்திலும் இதை பயன்படுத்தலாம்.
- எலுமிச்சை எல்லா காலத்திலும் பயன்படுத்தலாம்.
- சோப்பு உட்பட அனைத்து பொருட்களிலும் பயன்படுத்தப்படுவது எலுமிச்சை.
- உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கும்.
நிவாரணம் தரும் எலுமிச்சை
இத்தகைய சிறப்பு வாய்ந்த பழம் சோப்பு உட்பட அனைத்து பொருட்களிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி பொலிவற்ற சருமத்தை பொலிவாகவும் வைக்கிறது. பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் பயன்படுத்துவதால் இதன் சாறு நிவாரணம் தரும்.
விட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கும். இதில் உள்ள பொட்டாசியம் மூளை மற்றும் நரம்பு தூண்டும், சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கும். எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து பெண்கள் போதிய அளவு எடுத்துக் கொள்வதால் இதிலிருந்து கார்சினோஜென், பெருங்குடல் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
வல்லமை படைத்த எலுமிச்சை
காலையில் இளஞ்சூடான நீரில் சாறு பருக மலச்சிக்கல் தொந்தரவு நீங்கி உடல் புத்துணர்வு பெறுகிறது. தொற்று நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் வல்லமை படைத்தவை. உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை கொண்டது. இதயம் நுரையீரல் போன்றவை நன்றாக இயங்க உதவுகிறது. நீரில் கலந்து குடித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் களைப்பு நீங்கி ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும் சக்தியை கொடுக்கிறது.
எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் செரிமான பிரச்சனை, வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் நிவாரணம் பெறலாம். ஓமத்தையும் கலந்து குடிப்பதால் வயிற்று தொந்தரவு சீக்கிரம் அண்டாது. பழத்தின் நிறம் மணம், சுவை எல்லோரையும் கவர்ந்த ஒன்று. இதில் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால் குறைவாக சாப்பிடும் போது உடல் எடை தானாக குறைந்து விடும்.
விருந்தினர்களை சிறப்பாக உபசரிக்க
மேலும் கொழுப்புகளை கரைத்து உடலுக்கு தோதான வடிவத்தைக் கொடுக்கிறது. புதிதாகக் குடியேறும் வீடு மற்றும் திறக்கப்படும் நிறுவனங்களின் வாசலில் கட்டாயம் எலுமிச்சம்பழம் இருக்கும். வீட்டுக்கு திடீர் விருந்தாளிகள் வரும் போது இவர்களுக்கு குடிக்கக் கொடுக்க ஒன்றுமே இல்லை என்றாலும், ஒற்றை எலுமிச்சை பழத்தை வைத்து ஜூஸ் கொடுக்க விருந்தினர்களை சிறப்பாக உபசரித்த நிம்மதி கிடைக்கும்.
நேர்மறை எண்ணங்களை கொண்ட எலுமிச்சை பழத்தில் ஏராளமான சக்திகள் இருக்கின்றன. பெரியவர்களை சந்திக்க செல்லும் போது எலுமிச்சை பழத்தை கொடுத்து ஆசி பெறுவது இன்னும் வழக்கத்தில் இருக்கின்றன. பூஜைப் பொருட்களில் நிச்சயம் எலுமிச்சைக்கு இடம் உண்டு.