தோல்வி அடைய கற்றுக்கொள்
கேட்க வித்தியாசமாக இருக்கிறதா?
கேட்க முகம் சுழிக்க வைக்கும் வாக்கியமாக இருக்கிறதே என்று எண்ணினால், இது உங்களுக்கான பதிவே
பொதுவாக வெற்றியை பற்றி மட்டுமே சிந்தனை செய்! வார்த்தையில் கூட ‘தோல்வி’ என்னும் சொல்லை பயன்படுத்தாதே என்பதே நமக்கு கற்பிக்கப்பட்ட கல்வி
நாம் அனைவரும் அறிந்ததை ஏற்றுக்கொள்வதில்லை
ஆனால் நிதர்சனமான உண்மை என்னவென்று பார்த்தால் தோல்விகளை கடக்காமல் வெற்றி என்ற சுவையை சுவைக்க முடியாது என்பதே!
இது நம் அனைவருக்கும் அறிந்த உண்மைதானே பிறகு ஏன் ‘தோல்வி’ என்ற சொல்லை உச்சரிக்கவே அஞ்சுகிறோம்? தோல்வியுற்றவர்களை பார்த்து நகைக்கிறோம்? தோல்வியே இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைக்கிறோம்?
காரணம் ‘அறியாமை’, தோற்றுவிடுவோம் என்கின்ற ‘அச்சம்’. நீருக்குள் மூழ்காமல் கப்பலில் மட்டுமே பயணித்து விடவேண்டும் என்கின்ற தவறான சிந்தனை.
பெரும்பாலான குழந்தை வளர்ப்பு
சிறு வயதிலிருந்து வளரப்படும் குழந்தை, ‘இந்த சமூகத்திலும், கல்வி நிறுவனங்களிலும், பெற்றோரிடமும் தோற்றுக் கொள்ளும் கலை கற்றுக் கொள்வதே இல்லை. குழந்தை பருவம் முதல் அந்த குழந்தைக்கு தோற்று மீண்டு எழும் வாய்ப்பை எவரும் கொடுப்பதில்லை.
வளர்ந்த பருவ வயதில் உண்மை சமூகத்தை மேர்கொள்ளும் போது தன்னம்பிக்கை இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ நேரிடுகிறது. அனைத்திற்கும் எவரேனும் துணையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஏங்குகிறது. தோல்வியை பார்த்து அச்சப்படுகிறது. சிறு சிறு முயற்சிகள் எடுத்தாலும் அதில் வரும் தோல்விகளை எதிர்கொள்ள மனவலிமையை இழக்கிறது.
வெற்றியை மட்டுமே மனதில் முடிவு செய்து முயற்சியை எடுக்கும் அந்த மனிதன் சிறு சிறு தோல்விகளையும் நிராகரித்து, ஒரு கட்டத்தில் தன்னால் என்னதான் இந்த உலகத்தில் இயலும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான்.
அப்பொழுதென்றால் தோல்வி வந்தால் குழந்தைகளை அவனே எழட்டும் என்று பெற்றோர் பார்த்துக் கொண்டு விட்டுவிட வேண்டுமா என்று கேட்டால், அப்படி இல்லை. அந்த குழந்தையின் தகுதிக்கேற்ப அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்ட பிறகு, இனி எந்த வழியும் இல்லை என்ற கட்டம் வரும்பொழுது மட்டுமே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு கை கொடுத்து உதவ வேண்டும்.
எனவே சிறு வயதில் இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தோல்வி அடைய அனுமதியுங்கள்.