ஆன்மிகம்ஆலோசனை

லக்ஷ்மி கடாட்சம் பெருக..!!

லக்ஷ்மி கடாட்சம் பெருக : நம் வீட்டை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக திருமணமான பெண்கள் தினமும் காலை எழுந்தவுடன், வாசல் சுத்தம் செய்து கோலமிட்டு இருக்க வேண்டும். காலை 6 முதல் 7 மணிக்குள் இதை செய்து விடவேண்டும். இதை முடித்த பின்னரே சமையல் செய்ய ஆரம்பிக்க வேண்டும். முதல் நாள் இரவே அடுப்படியில் அனைத்தையும் சுத்தம் செய்து வைத்துவிடவும். சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி வைத்துவிட வேண்டும்.

காலைல இந்த வேலைகளை எல்லாம் செய்யக்கூடாது. பின் சிங்க் எப்பவும் சுத்தமாக இருப்பது நல்லது. அடுப்பை இரவே சுத்தம் செய்து வைத்து விடவும். எனவே இந்த வேலையை முடித்துவிட்டு தான் தூங்க செல்ல வேண்டும். அனைத்தையும் சுத்தம் செய்த பிறகு, ஒரு சொம்பில் அதில் தண்ணீர் நிரப்பி வைப்பது நல்லது. ஏனென்றால் இரவில் நம் வீட்டு தெய்வங்கள் என்ன இருக்கிறது என்று வந்து பார்ப்பார்கள். அதனால் ஒரு செம்பில் தண்ணீர் வைத்து விடுவது நல்லது.

மாவிலை தோரணம்

நம் வீடு எந்த அளவிற்கு சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். அந்த அளவிற்கு மகாலட்சுமி வாசம் செய்வாள். ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முக்கிய தினங்களில், அம்மாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, சஷ்டி, போன்ற நாட்களில் வீட்டை துடைப்பது கூடாது. இந்த விசேஷ நாட்களுக்கு முந்தைய நாளே வீட்டை துடைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வருஷப்பிறப்பு மாதப்பிறப்பு முதல் நாள் மாலையே வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது சிறந்தது.

செவ்வாய் வெள்ளிக் கிழமைகள் வாரம் இரண்டு நாட்களாவது வீட்டை தண்ணீரை தொட்டு துடைக்க வேண்டும். அடுப்பங்கரையில் உங்கள் அரிசி இருக்கும் பாத்திரத்தை, உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தை எப்பொழுதும் அடுப்பிற்கு கீழ்தான் வைக்கவேண்டும். ஏனென்றால் அவற்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். என்பதால் தினமும் அதை எடுக்கும்போது உட்கார்ந்து குனிந்து எடுக்கிறோம். இதனால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

உங்கள் வீட்டு தொடப்பம் எப்பொழுதும் நிறுத்தி வைக்க வேண்டும். தலைகீழாக, படுக்க வைக்க கூடாது. சுத்தம் செய்கிற அனைத்து பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால் அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். வடமேற்கு மூலையில் துடைப்பம் வைப்பது நல்லது. குப்பைகளை தினமும் வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்குள்ளேயே குப்பையை வைத்துவிடாதீர்கள்.

மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு

உங்கள் வீட்டு வாசலில் செருப்புகளையும், துடைப்பம், குப்பைத் தொட்டிகளை வைத்து விடவேண்டாம். உங்கள் வீட்டிற்குள் நுழையும் வாசல் தலைவாசலுக்கு வலதுபுறமாக உங்கள் செருப்புகளை அடுக்கி வைக்கலாம். வாரம் தவறாமல் நிலப்பகுதிக்கு மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வையுங்கள். இதனால் வீட்டிற்குள் எந்த கிருமிகள் அண்டாமல் இருக்கும்.

வீட்டின் திருஷ்டியை போக்க வீட்டு வாசலில் எலுமிச்சம் பழம் இரண்டாக கட் செய்து, குங்குமம் வைத்து இரண்டு நிலப்பகுதிகளிலும் வைக்கலாம். நாம் செய்கிற சிறு விஷயங்கள், நம் வீட்டின் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும், நிலைக்க வைக்கும். என்பதை எப்பொழுதும் மறவாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *