இன்றே கடைசி தவறவிடாதீர்கள்.. சர்வ மங்களம் உண்டாக!
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று விரதம் அனுஷ்டிப்பதால் சகல செல்வமும் பெற்று வாழலாம். புரட்டாசி நான்காவது சனிக்கிழமை வறியவர்கள், எளியவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். இவர்களுக்கு உணவளிக்க வேண்டும். வீட்டின் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபட்டு வர வளங்கள் பல பெற முடியும்.
புரட்டாசி மாத சனிக்கிழமை
- சனி தோஷம் உரியவர்கள் களில் விரதமிருந்து பெருமாளை வழிபட சனி தோஷம் நீங்கும்
- இந்த நாள் திருமாலை வணங்கி வருவதால் நம்மை சுற்றி உள்ள தீமைகள் முற்றிலும் அகலும்.
- கடைசி சனிக்கிழமை இன்று இந்த அரிய நன்னாளை தவற விடாதீர்கள்.
செல்வம், ஆயுள், ஆரோக்கியம்
இவ்விரதத்தில் சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். மற்ற வாரங்களில் வரும் சனிக்கிழமை விட இந்த தினம் விசேஷ அம்சங்களை கொண்டது. செல்வம், ஆயுள், ஆரோக்கியம் போன்ற மூன்று பலன்களையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய விரதம் புரட்டாசி சனிக்கிழமை விரதம்.
பெருமாளை வழிபடுவதற்கு
பெருமாளை வழிபடுவதற்கு புண்ணிய தினமாக கருதப்படுகிறது. இன்றைய தினம் உங்களால் முடிந்த தான, தர்மங்களை செய்வது உத்தமம். வீட்டில் பெருமாளுக்கு நெய் விளக்கேற்றி படையல் வைத்து வழிபடலாம். கோவிலுக்கு சென்று நல்லெண்ணெயில் தீபமேற்றி வழிபடலாம்.
மேலும் படிக்க : பிரதோஷகால ஈஸ்வர தியானம் மந்திரம்
கடைசி சனிக்கிழமை
பெருமாளுக்கு துளசி மாலை சாற்றியும், ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை, ஸ்ரீ ராம ஜெயம் எழுதி மாலை சாற்றியும் வழிபட கைமேல் பலன் கிடைக்கும். சர்வமங்களம் தரக்கூடிய இன்று கடைசி சனிக்கிழமை வீட்டிலும் கோவிலுக்கும் சென்று பெருமாளை வழிபட தவற வேண்டாம்.