செய்திகள்தேசியம்

அதிவேகத்தில் பரவும் காட்டுத்தீ கலிபோர்னியாவில் பத்து லட்சம் ஏக்கர் காடுகள் நாசம்

கலிபோர்னியாவில் கடந்த ஒரு வாரத்தில் 10 லட்சம் ஏக்கர் காடுகள் தீக்கிரையாகி இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளன. பல விலங்குகளும் செய்வதறியாது தீயில் கருகின. மனித தவறுகள், இயற்கையின் செயல் என காடுகளில் காட்டுத் தீ ஏற்படுகின்றன.

பல ஆண்டு கால தாவரங்களை காட்டுத் தீ சில மணி நேரங்களில் கரியாக்கி விடுகின்றன. காடுகள் தான் பூமியின் பாதுகாவலர்கள். காடுகள் மூலமாகவே பூமி அதிக வெப்பம் அடையாமல் இருக்கின்றது என்பது நாம் அறிந்ததே.

காடுகள் அழிந்தால் பூமியில் வெப்பநிலை அதிகரிக்கும். பனிக்கட்டி உருக ஆரம்பிக்கும். கடல் மட்டம் உயரத் தொடங்கும். அடுத்தடுத்த அழிவுகளும் ஏற்படும். இப்படி விதையிலிருந்து செடி முளைத்து வளர்ந்து வரும் மரங்கள் நொடிப்பொழுதில் எரிந்து சாம்பலானது.

காட்டுத் தீயினால் தான் கலிபோர்னியாவில் கடந்த ஒரு வாரத்தில் 10 லட்சம் ஏக்கர் காடுகள் தீக்கு இரையாகி இருப்பதாக தகவல் வெளியானது. கலிபோர்னியா காட்டுத் தீ ஒரு வாரத்தில் எரிந்த 10 லட்சம் ஏக்கர் காடுகள் குறித்து இதனால் வன ஆர்வலர்கள் கவலை கொண்டதாக கூறப்படுகிறது.

காட்டுத் தீயால் ஐந்து பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல். மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாகி உள்ளன என்றும் தகவல் வெளியாகியது. சுமார் 700-க்கும் அதிகமான குடும்பங்கள் வீட்டை காலி செய்து விட்டு வெளியேறினர்.

ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி முதல் இந்த காட்டுத் தீ எரிந்து வருகின்றன என்ற தகவல் கிடைக்கிறது. இடி, மின்னல் காரணமாக காட்டில் தீ பற்றியதாக வனத்துறை தெரிவித்துள்ளன. சுமார் 13 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு மற்றும் வனத்துறை தீயை அணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *