சுற்றுலா

வியக்க வைக்கும் ஏரி: ஆச்சரியத்தில் மக்கள்! கோடைகாலத்தில் நிறம் மாறுகிறதா?

பல்வேறு அதிசயங்களை உள்ளடக்கிய சைபீரியாவில் தான் அதிசய ஏரி அமைந்துள்ளன. அது பர்லின்ஸ் கோய் ஏரி. இந்த ஏரியில் கோடை காலத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரை வானத்தில் சூரியனின் இளம் சிவப்பு நிற சூரிய கதிர்கள் ஏரியில் பட்டு பிங்க் கலராக காட்சியளிப்பது மனதைக் கொள்ளை கொள்கின்றன.

இந்த ஏரியின் ஆழம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் வெறும் இரண்டு அடிதான். 31 சதுர கிலோ மீட்டர் கொண்டது இந்த ஏரி என்பது வியக்க வைக்கின்றது. அதிக அளவிலான உப்புகள் இந்த ஏரியில் உள்ளது என்பதால் இங்கு உடம்பில் காயங்கள் இருப்பவர்கள் வந்து கைகளை நனைத்து விட்டு செல்கிறார்கள். உடனேயே சரியாவதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

அந்த அளவிற்கு ரஷ்யாவில் அதிக உப்புத்தன்மை கொண்ட ஏரி இதுதான். ஆர்டிக் கடலின் அருகில் அமைந்துள்ளன. ஏரியின் அருகிலேயே உப்பு தயாரிக்கப்பட்டு ரயிலில் எடுத்துச் செல்லப்படுகிறது. ரஷ்யா முழுக்க விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் பெரும்பகுதியை கொண்டுள்ள சைபீரியாவில் குறைவான மக்களே வசிக்கின்றனர். காரணம் இதன் குளிர்ந்த தன்மை தான். ஜனவரியில் -25 டிகிரி குளிர் அடிக்கும் என்றால் இதன் காலநிலை எப்படி இருக்கும் என்று யோசித்து கொள்ளலாம்.

ரஷ்யாவில் உப்பு ஏரி ஒன்று கோடை காலத்தில் சூரிய கதிர்கள் பட்டு பின் மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் மாறும் வீடியோ வைரல் ஆகி வருகின்றன. ஆஸ்திரேலியா அளவிற்கு பரப்பளவை கொண்ட பெரிய சைபீரியாவில் பெரும்பாலும் பனி மலைகளும் பல்வேறு அதிசயங்களும், உலகின் பழமையான நன்னீர் ஏரியான பைக்கால் ஏரி, உலகின் பெரிய ஆறுகளும் அமைந்துள்ளது. பைக்கால் ஏரியின் பரப்பளவு மட்டுமே நெதர்லாந்து நாட்டிற்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *