லேடி சூப்பர் ஸ்டார் இடத்தை நயனிடமிருந்து தட்டிப் பறித்த பிரபல நடிகை
கடந்த பல வருடங்களாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் கம்பீரமாக இருந்தவர் நயன்தாரா. இவர் இந்த இடத்திற்கு வர பல தடைகளை தாண்டியும் வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து தான் வந்துள்ளார்.

தனக்கு கிடைத்த லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்காக அவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். அவரது முழு திறமைக்கு கிடைத்த பரிசே இதுவாகும். ஆரம்பத்தில் ஒரு லோக்கல் டிவி சேனலில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்த இவர் தனது திறமையின் மூலம் பல தடைகளை முறியடித்து படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்தார். பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார் ,சூர்யா ஆகியவருடன் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அவ்வளவாக பேமஸ் ஆகவில்லை. பின்பு தனது உழைப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு வந்தார் அந்த இடத்தை பல வருடங்களாகவும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தக்கவைத்து திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

இவ்வாறு ஃபேமஸ் ஹீரோனியாக இருந்த நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனரும் பாடல் ஆசிரியருமான விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்தது.
மேலும் படிக்க : முடிவில்லாத நட்பு இசை சகாப்தம்

திருமணத்திற்கு பின் அவர் படங்களிலும் நடிக்க உள்ளார். ஆனால் இவர் திருமணத்திற்கு முன்பு நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா மிகவும் வயதானவர் போல் இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். அவரைவிட சமந்தா தான் அப்படத்தில் மிக அழகாக உள்ளார் என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு பின் நயன்தாரா ஒரு ஆன்ட்டியை போல் இருப்பதாக பலரும் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க முன்பு முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை திரிஷா சில காலங்களாக மார்க்கெட்டை விழுந்து இருந்தார் .
ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இவர் நடிப்பதன் மூலம் மீண்டும் அவரது மார்க்கெட் ஏறிவிட்டது இது மட்டுமல்லாது லேடி சூப்பர் ஸ்டாரின் இடத்தை அடுத்து த்ரிஷா தான் பிடிப்பார் என்று அனைவரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். த்ரிஷா தான் கண்டிப்பாக அடுத்து லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பார் என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் படிக்க ; காவல்துறையால் ஜிப்ரான் பாடல் வெளியீடு
