லட்சுமி அருள் நிறைய லட்சுமி குபேர பூஜை
நம் வீட்டில் செல்வம் செழிக்கவும். லட்சுமி அருள் நிறைந்து இருப்பதற்காக லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது. பொதுவாக லட்சுமி குபேர பூஜை வியாழக்கிழமைகளில் மாலை நேரங்களில் கடைபிடிக்கப்படுகிறது. தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமைகளில் வழிபடுவது வழக்கம். வெள்ளிக்கிழமைகளிலும் லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.
- தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமைகளில் வழிபடுவது வழக்கம்.
- வெள்ளிக்கிழமைகளிலும் லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.
- வருடத்திற்கு ஒரு முறை தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.
தீபாவளி அன்று
வருடத்திற்கு ஒரு முறை தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது. வருகின்ற சனிக்கிழமை 14.11.2020 அன்று மாலை லட்சுமி குபேர பூஜை வைப்பதற்கு பதிலாக, 13 வெள்ளிக்கிழமை அன்று மாலை லஷ்மி குபேர பூஜை செய்யலாம் என்ற கருத்து நிலவுகிறது. சனிக்கிழமை தீபாவளி வருவதால் முன்னதாக வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமையில் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
லக்ஷ்மி குபேர அர்ச்சனை
லக்ஷ்மி குபேர பூஜையை வழக்கமாக வழிபடுவது போல லட்சுமி குபேரன் படத்தை வைத்து, குபேரனின் இந்த நம்பர்களை வரைந்து கோலம் ஆகவும் போட்டு வழிபடுவது சிறப்பு. பொட்டு வைத்து வாசனை பூக்களை சாற்றி வழிபட வேண்டும். இனிப்பு பதார்த்தங்களையும், பழங்கள் நிவேதனம் செய்ய வேண்டும்.
ஒரு சிலர் கலசம் வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் கலசம் வைத்தும் வழிபடலாம். கலசம் வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பிறகு தூப, தீபம் காட்டி குபேரன் 108 போற்றி, ரூபாய் நாணயங்கள் அல்லது லக்ஷ்மி குபேர கோல்ட் காயின் வைத்தும் அர்ச்சனை செய்யலாம்.
தடைபட்ட காரியங்கள்
இரண்டும் இல்லாதவர்கள் பூக்களால் அர்ச்சனை செய்யலாம். இதனால் நான்கு திசைகளிலிருந்து தடைபட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும். இந்த பூஜை முடித்து விட்டு மறு நாள் காலையில் மறுபூஜை போட்ட பிறகு பூஜையை முடித்து கொள்ளலாம். இந்த பூஜையை ஒவ்வொரு தீபாவளிக்கும் தொடர்ந்து வழிபட வேண்டும். வருடத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு தேவையான பொழுது இந்த பூஜையை செய்து கொள்ளலாம். பொதுவாக வெள்ளிக்கிழமை செய்வது நல்லது.
மேலும் படிக்க : சாட்சாத் மகா விஷ்ணுவின் 108 போற்றி