உடல் சூட்டை தணிக்கும் கோவக்காய்…!!
நாக்கில் ஏற்படும் புண்களை குணப்படுத்த கோவக்காய் உதவுகிறது. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்து வர பல நோய்களை தடுக்கலாம். எடை இழப்பு போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வாகவும் அளிக்கப்படுகிறது. கோவக்காய் செடி சாறிலிருந்து பல ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப் படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சோர்வை போக்கவும், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கவும் இந்த ஆயுர்வேத மருந்து கொடுக்கப்படுகிறது.
மெட்டபாலிக் தன்மை இதயத்துக்கு நல்லது. கல்லீரலுக்கு நன்மை பயக்கக்கூடியது.ஆஸ்துமா, மஞ்சள் காமாலைக்கு இதை சாப்பிட விரைவில் குணம் ஆகும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக இந்த செடி சாறை மருந்தாக பயன்படுத்துகின்றனர். சிறுநீர் பிரச்னை, வெள்ளைபடுதல், வயிறு செரிமான பிரச்னை போக்க மருந்தாக பயன்படுகிறது.
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பாகும், என்று ஆயுர்வேத நூல்களில் இதன் சிறப்பை கூறுகின்றனர். வாய்வு, வாந்தி, ரத்த சோகை, பித்தம், காமாலை, பித்தம் முதலிய பிரச்சனையை போக்கும். கடிகளால் ஏற்பட்ட காயத்திற்கு இதன் இலையை அரைத்து பூச புண்கள் ஆறும். இலை, தண்டு கபத்தை போக்கும். வலியை குறைக்கும். சுவாசக்குழாய் அடைப்பு, மார்புசளிக்கு கசாயமாக குடிக்கலாம்.
வாரம் இருமுறை
பித்தம், வாய்வுக்கு முடிவு கட்டும் அருமருந்தாக உள்ளது. பரம்பரையாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோவைக் காயை தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்ளலாம். உடல் பலத்துக்கு சிறந்தது. பச்சையாக கோவைக்காயை மென்று துப்பினாலே, வாய்ப்புண் குணமாகும். வாய்ப்புண் இருப்பவ ர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்ளவும். கோவைக்காயை மோரில் அரைத்து கலந்து குடிக்கலாம்.
சூட்டை தணிக்க
தயிரில் கோவக்காய் பொடியாக நறுக்கியது, இஞ்சி துருவல் சிறிது, மிளகுப்பொடி, ஜீரக பொடி, உப்பு சேர்த்து பச்சடியாக சாப்பிடலாம். தவறான உணவு பழக்கத்தால் ஏற்படும் சூட்டை தணிக்க கோவக்காய் உதவும். இதன் முழுத் தாவரமும் மறுத்து குணம் கொண்டதால் இதன் பயனை தெரிந்து கொண்ட மக்கள் பலரும் இதை உணவில் சேர்த்து கொள்கின்றனர்.
Pingback: உடலின் நச்சு தன்மையை போக்க பீன்ஸ் சாப்பிடுங்க..!! | SlateKuchi