ஜோதிடம்

எனக்கு எந்த தோஷம் இருக்கு?

தமிழகத்தில் பொதுவாகவே ஜோதிடக்கலை மிக பிரபலமானது. அதிலும் துல்லியமாக கணிக்கும் ஜோதிட்கள் நம்மிடையேதான் வாழச் செய்கின்றனர்.
அதிலும் ஜோதிடர்கள் கூறும் பரிகாரங்களோ அளவே இல்லை. பரிகாரங்களோ, தோஷக் கழைவோ, எதுவாக இருந்தாலும் நாம் செய்த வினைக்கு நாம்தானே பொறுப்பு.

நம் தோஷங்களை நாமே சிறிதளவு கண்டுபிடிக்க இயலும்:


ஜோதிடரிடம் போகாமல், பிறந்த தேதியை கொண்டும் கணக்கிடாமல் நம் தோஷங்கள் எந்தெந்த கிரகங்களில் இருக்கின்றது என்பதை நாமே சிறிதளவு கணித்துக் கொள்ளலாம். தன்னைப் பற்றிய புரிதல் ஆளமாக இருக்கும் மனிதர்கள் மிகவும் தெளிவாகவே கணித்துக் கொள்ள இயலும்.

எப்படி?

இந்த முறை எந்த ஜோதிடக் கலையிலும் குறிப்பிடப்பட்டதல்ல. ஆதலால் இது எப்படி? அது எப்படி என்ற ஆராய்ச்சியில் மூழ்காமல் உங்கள் வாழ்க்கையில் ஒப்பிட்டுப் பார்த்து பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் பிடிக்காவிட்டால் விட்டுவிடுங்கள்.

இந்த முறைக்கு கட்டாயம் ஏதோ ஒரு முயற்சியை நீங்கள் சில மாதங்களுக்காவது எடுக்கும் நபராக நீங்கள் இருக்க வேண்டும். அது எந்த முயற்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம். தொழில் முயற்சி, உடல் ஆரோக்கிய முன்னேற்ற முயற்சி, தினமும் நான் இந்த பழக்கத்தை என் வாழ்வில் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நட்பு

இப்படி நீங்கள் முயற்சி எடுக்கும் பொழுது, உங்களின் நட்சத்திர அதிபதியின் ஆதிக்கம் இருக்கும் நாளில் உங்களுக்கு பெரும்பாலான தடைகள் இருக்காது. உதாரணத்திற்கு ஒருவரின் நட்சத்திர அதிபதி சூரியனாக இருக்கும் பொழுது, ஞாயிற்றுக்கிழமையில் அவர்களுக்கு தடைகள் குறைவாகவே இருக்கும்.

பகை

இப்படி நீங்கள் முயற்சி எடுக்கும் பொழுது, வாரத்தில் வரும் ஏதோ ஒரு நாளில் தடைகள் வந்துகொண்டே இருக்கும். இது ஒவ்வொரு நபருக்கும் இந்த நாள் மாறுபடும். உதாரணமாக ஒருவருக்கு சுக்கிர தோஷம் இருந்தால் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு தடைகள் வந்துகொண்டே இருக்கும். இப்படி ஒவ்வொரு நாளும் அவரவர் தோஷங்களின் வீரியத்திற்கு ஏற்ப தடைகளின் அளவும் இருக்கும்.

சமம்

சில நாட்களில், எனக்கு நஷ்டமும் இல்லை வரவும் இல்லை என்பது போன்ற சூழ்நிலை இருக்கும். அதற்கு காரணம், உங்களின் நட்சத்திர அதிபதியின் நட்பு கிரகங்கள் அந்த நாளில் இருக்கலாம். உதாரணமாக குரு பகவானிற்கு செவ்வாய் பகவான் நண்பர். அதனால் குரு ஆதிக்கம் இருக்கும் நபருக்கு செவ்வாய் கிழமையில் செவ்வாய் தோஷம் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.

ஆராய்ச்சி வேண்டாம் தோஷம் பிடிக்கும்

இதைப்பற்றி தெரிந்து கொண்டாலும் ஜோதிடத்தில் ஆளமான ஆராய்ச்சி தேவையற்றது. ஏனெனில் அதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மாக்கள் இருக்கின்றனர். அவர்களால் மட்டுமே ஆளமான ஆராய்ச்சிக்கு சென்று வெற்றிகான முடியும். ஆதலால் அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும் நம் வேலையை நாம் பார்ப்போம்

நிம்மஹஸ்தி தோஷம்

இதை எல்லாம் மீறி நான் ஜோதிடத்தை மட்டுமே நம்புவேன், அதன்படி மட்டுமே நடப்பேன் என்று இருப்போர்க்கு நிம்மஹஷ்தி தோஷம் பிடிப்பது உறுதி. அதென்ன நிம்மஹஷ்தி தோஷம் என்று கேட்குறீர்களா? நிம்மதியை இழந்து பைத்திரயக்காரன் போல் ஆராய்ச்சி செய்து திரிந்துகொண்டு இருப்பதுதான் நிம்மஹஷ்தி தோஷம். சும்மா கூறினோம்! அப்படியெல்லாம் ஒரு தோஷம் இல்லை. இதையும் போய் ஆராய்ச்சி செய்யாதீர்கள். எந்த தோஷம் பிடித்தாலும் மனிதன் இழப்பது நிம்மதியையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *