மகாளய அமாவாசை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
மகாளய அமாவாசை. வருடத்தில் வரும் பன்னிரண்டிலிருந்து பதிமூன்று அமாவாசைகளில் ஒன்றான மகாளய அமாவாசை விசேஷமானது. பூமியில் வாழும் நமக்கு ஒரு வருடம் இறந்துபோனவர்களுக்கு ஒரு நாளிற்கு சமம். முன்னோர்களுக்கு வருடாந்திரம் செய்யும் திதி ஒரு நாளிற்கு சாப்பாடு அளிப்பதற்கு சமம். சாப்பாடு அளித்தபின் அவ்வப்போது குடிக்கும் தண்ணீரே அமாவாசை தர்ப்பணம். நாம் ஒரு நாளிற்கு எவ்வளவு முறை தண்ணீர் குடிப்போம் என்று யோசித்துப் பாருங்கள்! திதிக் கொடுப்பவர்கள் அம்மாவாசை மறவாமல் தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை மகாளய பட்சத்தில் வரும் எல்லா திதிகளிலும் தர்ப்பணம் தருவது வழக்கம். அவரவர் வசதிக்கும் நேரத்திற்கும் தகுந்தவாறு தன் தாய் தந்தையரின் திதிக்கு மட்டுமே தர்ப்பணம் செய்கின்றனர். சிலர் மகாளய அமாவாசையில் மட்டுமே தர்ப்பணம் செய்கின்றனர். இந்த அவல நிலையை என்னவென்று சொல்வது! எதுவும் செய்யாமல் இருக்க இது செய்வதே மேல் என்றாகிவிட்டது.
மகாளய அமாவாசை அன்றுதான் மகிஷாசுரனை வதைக்க அம்பாள் மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்த நாள். இதனைத் தொடர்ந்துதான் நவராத்திரி ஆரம்பம் ஆகும். இந்த முறை புரட்டாசி மாதத்தில் மற்றொரு அமாவாசை வர அந்த அம்மாவாசையிலிருந்து நவராத்திரி துவங்குகிறது.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 17/09/2020
கிழமை- வியாழன்
திதி- அமாவாசை (மாலை 5:24) பின் பிரதமை
நக்ஷத்ரம்- பூரம் (காலை 10:57)பின் உத்திரம்
யோகம்- சித்த பின் மரண
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- சதயம்
ராசிபலன்
மேஷம்- நன்மை
ரிஷபம்- ஓய்வு
மிதுனம்- நிம்மதி
கடகம்- பாராட்டு
சிம்மம்- நலம்
கன்னி- துன்பம்
துலாம்- அசதி
விருச்சிகம்- பக்தி
தனுசு- லாபம்
மகரம்- ஆக்கம்
கும்பம்- தனம்
மீனம்- உற்சாகம்
தினம் ஒரு தகவல்
நெருச்சி கஷாயம் செய்து அருந்தி வர ரத்தக் கொதிப்பு சரியாகும்.
சிந்திக்க
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.