பெருந்தலைவர் காமராசர் பிறந்ததினம்
கர்ம வீரர் காமராஜ் அவர்களின் பிறந்த தினம் ஆகும். ஜூலை 15 ஆம் நாள் 1903 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் நாட்டில் க கல்விக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கினார். காமராஜ் அவர்களின் தேசப் பணியை பாராட்டி அவரை கருப்பு காந்தி எனவும் மக்கள் அழைப்பார்கள்.
காமராஜ் அவர்கள் இளம் பருவம்:
படிக்காத மேதை காமராஜ் அவர்கள் தன்னுடைய இளமை காலம் முதல் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். தனக்கென ஒரு வாழ்க்கை வாழாமல் தேச விடுதலையை உயிர் மூச்சாய் கொண்டு செயல்பட்டவர். வித்யா சாலா பள்ளியில் இவர் பயின்றார். காமராசர் உண்மையான பெயர் காமாட்சி ஆகும். சிவகாமி அம்மாள் குமாரசாமி நாடார் இவரது பெற்றோர்கள் ஆவார்கள்.
தென்னாட்டு காந்தி காமராசர்:
தென்னாட்டு காந்தி என காமராசரை அழைப்பதுண்டு மிகவும் எளிமையானவர். சத்திய வாழ்க்கை வாழ்ந்தவர் காமராசர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சிறு வயது முதல் பொறுமை, விட்டுகொடுக்கும் மனப்பான்மை கொண்டவராக திகழ்ந்தார் காமராசர்.
இளமை வாழ்கை தேச விடுதலைக்கு அர்ப்பணிப்பு
16 வயதில் விடுதலைப்பணிக்காக காமராசு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாஎ. ராஜாஜியின் தலைமையில் 1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார் காமராஜ். இதன் பொருட்டு கல்கத்தா அலிபூர் சிறையில் அடைக்கப்ப்ட்டார். மேலும் விருது நகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி விடுதலை ஆனார். 1943 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று கைதானார். தன் வாழ்நாளில் இளமைப் பொழுதை நாட்டுக்காக அர்ப்பணித்து சிறையில் வாழ்ந்தார் காமராஜ்.
அரசியல் குருவாக சத்தியமூர்த்தியை கொண்டு செயல்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் சத்தியமூர்த்தி வீட்டுக்குச் சென்று அங்கு தேசிய கொடி பறக்கச் செய்தார்.
தமிழக முதல்வர் காமராசர்:
காமராசர் காலத்தில் அவருக்கு எதிராக நின்று போட்டியிட்ட சுப்பிரமணியம், பக்தவத்சலம் போன்றோருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார் காமராசர். அவருடைய அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் இருந்தனர். 1953 ஆம் ஆண்டு முதல் தமிழக முதலமைச்சராய் இருந்தார்.
கல்விகண் திறந்த காமராசர்:
முதலமைச்சராய் காமரசர் இருக்கும் பொழுது கல்வியின் முக்கியத்துவம் தெரிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார் காமராசர் காலத்தில் சுமார் 27000 பள்ளிகள் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டன. பிள்ளைகள் படிக்க அவர்களுக்கு ஏற்படும் சவால்களை சமாளிக்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் காமராசர்.
நீர்பாசன திட்டங்கள் செய்த காமராசர்:
காமராசர் முதலமைச்சராய் இருந்த காலத்தில் செயத நீர்ப்பாசன வசதிகள் மொத்தம் 10 ஆகும். நீர்பாசன திட்டங்கள் மூலம் தமிழ் நாட்டில் பவானித்திட்டம், மேட்டூர் காலவாய்த்திட்டம், காவிரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு திட்டம், சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய திட்டங்கள் அனைத்தும் காமராசர் செய்தது ஆகும். குடி நீர் சிக்கல் தீர்ர்க மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலம் காமராசர் காலத்தில் உருபா
தமிழகத்துக்கு தொழிற்சாலைகள் திட்டம்:
காமராசர் காலத்தில் தமிழகம் தொழிற்சாலை திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. தொழிற்சாலைகள் பல நிறுவப்பட்டன. பாரத் மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்தகரிப்பு நிலையம், இரயில் இணைப்பு தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை குந்தா மின் திட்டம், நெய்வேலி மற்றும் ஊட்டி வெப்ப மின் திட்டங்கள் காமராசர் காலத்தில் உருவாக்கப்பட்டது ஆகும்.
காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பு கிங் மேக்கர் காமராஜ்:
1954- 1957, 1957-1962, 1962-1963 ஆகிய வருடங்களில் முதலமைச்சராய் இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சிப்பணி முக்கிய பங்கு வகித்தார். காமராஜ் காலத்தில் கே- பிளான் எனப்படும் காமராஜ் திட்டம் உருவாக்கினார். இந்த திட்டத்தின்படி கட்சியின் மூத்த தலைவர்கள் இளையவர்களிடம் ஒப்படைத்து கட்சிப்பணியாற்றச் செல்லுதல் அவசியம் ஆகும். அக்டோபர் 2 1963 ஆம் ஆண்டு தனது முதலமைச்சர் பதவியை ஒப்படைத்துவிட்டு டெல்லிக்கு கட்சிப்பணிக்காக சென்றார்.
பிரதமரை உருவாக்கிய கிங்மேக்கர் காமராஜ்
லால்பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய், இந்திரா ஆகியோரை பிரதமராக உருவாக்கினார். காமராசர் தவறு எனில் யாரையும் தட்டிக் கேட்க தயங்கமாட்டார். அவ்வாறே இந்திராவின் செயல்பாட்டையும் எதிர்க்கச் செய்தார். 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி பிறந்தநாள் அன்று மறைந்தார்.