மருத்துவ வகைகளும் மனித வாழ்க்கையும்
அலோபதி, அக்குபஞ்சர், ஹோமியோபதி, அனாடமிக் தெரபி, தியானம் இவைகளுக்குள் பல வேறுபாடுகள் உள்ளன. அறிவியல் காலத்தில் மெய் ஞானத்தால் உருவானது சித்த மருத்துவத்தை அடுத்து பல்வேறு மருத்துவங்கள் உருவானது.
அலோபதி -அன்னமய கோசம்.
அக்குபஞ்சர் – பிராணமய கோசம்.
ஹோமியோபதி – மனோமய கோசம்.
அனாடமிக் தெரபி – விஞ்ஞானமய கோசம்.
தியானம் – ஆனந்தமய கோசம்.
உடலின் ஐந்து அடுக்குகள் இருப்பதாக பதஞ்சலி யோக சூத்திரம் சொல்கிறது. ஆம் அதனை முழுமையாக சீராக இயக்க வேண்டும்.
1. அன்னமய கோசம்
- பிராணமய கோசம்
3. மனோமயக் கோசம் - விஞ்ஞானமயக் கோசம்
- ஆனந்தமயக் கோசம்
- அலோபதி
இது உங்கள் அன்னமய கோசத்தில் வேலை செய்கிறது அதாவது அலோபதி வைத்தியம் மனித உடலை மட்டுமே நம்புகிறது.
விஞ்ஞானக் கருவிகள்தான் உடல் வியாதிகளை சரி செய்கின்றன. வியாதியும் முழுமையாக குணப்படுத்த சிலகாலங்கள் ஆகின்றன சில நேரங்களில் வியாதிகள் குணமாகமல் இருக்கின்றது அது அலோபதியாகும். ஆபத்துக் காலத்தில் அலொபதி பயனுள்ளதாக இருக்கிறது.
2. அக்கு பஞ்சர்
பிராணமயக் கோசத்தில் அக்குபஞ்சர் செயல்படுகின்றது. அக்கு பஞ்சர் வைத்தியம் உயிரியல் சக்தியில் உயிரியற் பொருளில் வேலை செய்யும் திறன் பெற்றது.
அக்குபஞ்சர் உடலில் ஏற்படும் குறைபாட்டை குறைத்து உடலைத் ஆற்றலுடன் பலமாக இயக்க வைக்கும். உடலில் முக்கிய புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பொழுது மொத்த உடலும் ஆரோக்கியதுடன் இருக்கும் .
உடலில் ஏற்படும் நோய் குறைப்பாட்டை குணப்படுத்த அலோபதியால் இயலாத சூழல் ஏற்படலாம். ஆனால் அக்குபஞ்சரால் அதை எளிமையாக குணப்படுத்த முடியும்.
மையப்பகுதியில் வடிவம்தான்
ரஷ்யாவின் கிர்லான் புகைப்படக்கருவி நமது உடலில் இப்படி எழுநூறு மையப் புள்ளிகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.
உடலின் வெளிப்புறத்தில் நமக்கு எழுநூறு மையப்புள்ளிகள் தெரிவதில்லை . நீங்கள் உங்கள் மையப்புள்ளிகளை சரி செய்வதன் மூலம் உடலின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கலாம்.
ஒரு அக்குபஞ்சர் மருத்துவருக்கு நோய் முக்கியமில்லை நோயாளிதான் முக்கியம்
காரணம் நோயாளிதான் நோயை உருவாக்கி இருக்கிறார்.
எனவே அனைவரும் அக்குபஞ்சர் கற்றுக்கொள்ள வேண்டும். அக்கு பஞ்சர் பயன்படுத்தி வாழ்வை ஆரோக்கியமாக பயன்படுத்தலாம்.
ஹோமியோபதி
ஹோமியபதியானது மனோமயத்தின் மூலம் பணியாற்றும் . சிறிய அளவிலான மருந்து ஆழமாகப் போகும் மருந்தின் அளவைக் குறைத்துக் கொண்டே செல்லும் இந்த முறைக்கு வீரியப்படுத்துதல் என்று பெயர்.
நோயானது அதிக வீரியம் இருக்கும் போது அதன் அளவு சிறியதாக இருக்கும். மனோ மையத்தின் ஆழத்திற்கு செல்லும். அது உங்கள் மன உடலுக்குள் செல்லும். அங்கிருந்து வேலை செய்யத் துவங்கும். பிராணமயத்தை விட அதிகமாக வேலை செய்யும்.
அனாடமிக் தெரபி
எது நல்லது? எது கெட்டது? எது வேண்டும், எது வேண்டாம். எது உண்மை? எது பொய்? என்பதைப் புரிந்து கொள்வதே விஞ்ஞானமய கோசம் ஆகும்.
தியானம்
ஆனந்தமய கோசத்திற்கு தியானம்தான் சிகிச்சை வைத்தியம். தியானம் உங்களுக்கு எந்த ஒரு சிந்தனையும் செய்யாது. காரணம் யோசனை என்பது வெளியில் இருந்து வருவது .
நீங்கள் யாரையாவது நம்பியிருக்க வேண்டும். சிந்தனைக்கு தியானம்தான் உங்களை சரியானபடி உணரச் செய்கிறது.
தியானம் ஒரு தூய்மையான புரிந்து கொள்ளுதல். அது ஒரு சாட்சிபாவ நிலை. தியானத்தில் ஒருவர் ஆழ்ந்து உள்ளே சென்றால் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்.
உலகத்தில் தியானம் வெற்றி பெற்றால் பிறகு எந்த மதமும் தேவையில்லை . தியானத்தில் நீங்கள் இருத்தலோடு நேரடி தொடர்பில் இருப்பீர்கள்.
தியானத்தின் உச்சமே புத்துணர்ச்சி.
தியானம் முழுமை பெறும் போது உன்னுடைய இருத்தல் முழுவதிலுமே ஒளி வருகிறது.முழு பேரின்பம் பரவுகிறது. முழு பரவசம் உன்னை ஆட்கொள்கிறது.
தியானப் பயிற்சி கற்றுக்கொள்ள அருகிலுள்ள மனவளக்கலை மன்றம் அல்லது அறிவுத்திருக்கோயில் செல்லுங்கள்.