விளம்பர வகைகள் அதன் மாயங்கள்
விளம்பரத்தின் ஜாலங்கள்
இன்றைய அதிவேக டிஜிட்டல் விளம்பரங்கள் எங்கோ சென்று கொண்டிருக்கின்றன அதுவும் இந்த நவீன காலத்தில் சாதாரண சுவரொட்டி விளம்பரங்கள் கூட பல்வேறு நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றன அவற்றில் ஒரு சிலவற்றை இன்று நாம் காண இருக்கிறோம்.
டிப்டாப் டிஜிட்டல் விளம்பர கட் அவுட்கள் ( Regular Hoarding ) :
இவற்றை நாம் சர்வசாதாரணமாக எங்கு வேணாலும் காணலாம் .
ஷாப்பிங் மால்களிலும், தியேட்டர்களும் இத்தகைய கண்களை கவரும் விளம்பரங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
முன்பெல்லாம் துணியில் ஒட்டப்பட்ட இத்தகைய விளம்பரங்கள் பின்னாளில் டிஜிட்டல் வடிவம் பெற்றன இப்போது டிஜிட்டல், 3டி போன்ற வண்ணங்களில் மக்களை பெருமளவில் ஈர்த்து கலக்குன்றன.
வியாபார உலகின் முக்கியமான ஒரு யுக்தியாக இந்த விளம்ர்ங்கள் இருக்கின்றன. இது அடுத்த கட்டத்தை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டு இருக்கிறது.
பேசும் பட விளம்பரங்கள் : ( Interative Hoardings )
மேற்கூறியது போல விளம்பரங்கள் கடந்த சில வருடங்களாக அடுத்த கட்டத்தை நோக்கி வேக வேகமாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது .
அதில் முக்கியமானதாகக் கருதப்படுவது பேசும் காட்சி .
உதாரணமாக ஒரு விளக்கு விளம்பரமாக இருந்தால் விளக்கின் வடிவத்தைப் போலவே இடம்பெற்றிருக்கும் அந்தப் விளம்பரங்கள் அந்த விளக்கைப் உயிரோட்டமாகக் காண்போரை கவரமாறு உருவாக்குவார்கள்.
காண்பவர் கண்களையும், கருத்தையும் கவர செய்ய முடியும்.
கருத்தியல் விளம்பரங்கள் : ( Concept hoardings )
ஒரு குறிப்பிட்ட ஒரு கருத்தையோ அல்லது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய விளம்பரப்படங்கள் பெரிதும் உதவுகின்றன.
சில வருடங்களுக்கு முன்பாக புலிகளை பாதுகாப்போம் என்ற சிந்தனையை வலியுறுத்திய இத்தகைய விளம்பரங்கள் நமது தமிழகத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.
தூரத்திலிருந்து பார்த்தால் வனம் போல தோற்றமளிக்கும் அந்த பதாகை சற்று அருகில் சென்றவுடன் அந்த வனத்தில் ஒரு புலி இருப்பதை போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது, அது மிகவும் வரவேற்கப்பட்டது.
உயிரோட்டமான காட்சி : ( Live Hoardings )
இத்தகைய உயிரோட்டமான படைப்புகள் மிகவும் நேர்த்தியாக அதுவும் தற்போது கண்முன் நடக்கும் காட்சிகளைப் போல அமைக்கப்பட்டிருக்கும்.
உதாரணமாக ஒரு டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் வைக்கப்பட்டிருக்கும் காரின் கண்ணாடியில் இருந்து திடீரென்று வெளிச்சம் பரவுவதை போலவும் அல்லது அதில் இருந்து புகை வருவது போலவும் அமைக்கப்பட்டிருக்கும் அது கண்முன் நடக்கும் காட்சிகளை போல மிகவும் தத்ரூபமாக இருக்கும்.
அதிக ஜன நடமாட்டம் இருக்கும் இடத்தில் இத்தகைய காட்சிகள் வைக்கப்படுவது தற்போது ஓரளவு தடைபட்டு இருக்கிறது.
ஏனென்றால் காண்பவர் கண்களையும், கருத்தையும் இது அந்த அளவுக்கு கவரக் கூடியது.
ஆட் ஏஜென்சிகள்
முன்பெல்லாம் ஆட் உருவாக்க ஓவியங்கள், படங்கள் உருவாக்கம் , இருந்தது தற்பொழுது கம்பியூட்டர் ஜாலங்கள் மற்றும் டிஜிட்டல் தட்டிகள் அத்துடன் காட்சிக்கு சக்தி கொடுக்கும் இசை, நுணுக்கமான காட்சிகள் ம உருவாக்கப்படுகின்றன.
டிஜிட்டல் விளம்பரங்கள்
வணிகத்தில் பொருட்கள் மற்றும் வழக்குகள் வரை அனைத்தையும் அதற்க்குரியவற்றில் நாம் முறையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். வீட்டு விழாக்கள் முதல் அரசு விழாக்கள், வணிப நடவடிக்கைகளை அனைத்தையும் இந்த நவீன உலகில் நாம் பேக் அப் செய்து கொள்ள இந்த விளம்பர உலகம் பெரும் பங்கு வகிக்கின்றது.
சா.ரா