கருணை இருக்கிற காயையா? நாம் சாப்பிடுகிறோம்..!!
ஆரோக்கியம், அழகு பராமரிப்பு நமது வாழ்க்கைக்கு அவசியமானது ஆகும். குண்டாக இருக்க உருளைக் கிழங்கும், ஒல்லியாக மாற கருணை கிழங்கும் சாப்பிட வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. இந்த கருணை கிழங்கு புளியில் ஊற வைத்தோ, அரிசி கழுவிய நீரில் ஊற வைத்தோ, நன்கு வேக வைத்து தோலை நீக்கி புளி சேர்த்து சமைக்க இதன் காரல் போவதுடன், அரிப்பும் நீங்கும். வேக வைத்த மசித்த கருணை கிழங்கு ஒரு ஸ்பூன், ஜீரகம், தனியா, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க கொழுப்பு கரையும், உயர் ரத்த அழுத்தம் குறையும்.
பெண்களே ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கனுமா
கருணை கிழங்கு கொழுப்பு சத்து ரத்த நாளங்களில் சேர்வதை இது தடுக்கும். கருணை கிழங்கு நச்சுக்களை வெளியேற்றும் நல்ல மருந்தாக இருக்கிறது. அல்சருக்கு கருணை கிழங்கு வைத்து மருந்து தயாரிக்கலாம். வேக வாய்த்த மசித்த கருணை கிழங்கு ஒரு ஸ்பூனுடன், ரெண்டு ஸ்பூன் தயிர் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட நெஞ்சு எரிச்சல், அல்சர் குணமாக்குங்க. நாற்பது வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்சனையின் போது, பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை இது அதிகரிக்கிறது. பெண்களின் ஹார்மோன் பிரச்சனையை இது கட்டுப்படுத்தும்.
உடலை குளிர்ச்சியாக்கும்
சர்க்கரை நோய் உள்ளவர் இந்த கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்த கருணை கிழங்கு எடுத்து கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பை கரைக்க, ரத்த உறைதலை துரித படுத்த முக்கிய பங்காற்றுகிறது. முடக்குவாதம் உள்ளவர்கள் இதை வாரம் இருமுறை உட்கொள்ள நோய் குணமாகும். உடலை குளிர்ச்சியாக்கும். ஆஸ்துமா இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
மூலம் வியாதி
சித்தா மற்றும் ஆயுர்வேதம் மருந்துகளில் கருணை கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றுள்ளது. உடல் உஷ்ணம் மிகுதியால் ஏற்படும் நோய்களை காக்க வல்லது. ஆன்டி ஆக்சிடென்ட், சி வைட்டமின் உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு உபாதைக்கு ஏற்றது. உடல் வலி இருந்தால் அதை குணப்படுத்த கூடிய ஆற்றலை கொண்டது. கிழங்குகளில் எளிதில் ஜீரணம் ஆக கூடியதும் கூட. மூலம் வியாதி இருப்பவர்கள் இந்த கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
குடலில் கிருமிகளை சேர விடாமல் தடுத்து, கொழு கல்லீரலுக்கு சுறுசுறுப்பு தருகிறது. பசியை தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும். பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு சத்துக்கள் உள்ளன. ரத்த மூலம், கபம், வாதம் குணமாகும். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், கருணை கிழங்கு தொடர்ந்து சாப்பிடலாம். கருணை கிழங்கு சுவையிலும், மருத்துவ குணத்திலும் சிறந்து விளங்குகிறது.