செய்திகள்தமிழகம்

கொரோனா என்றால் வீழ்ந்து விடுவோமா என்ன மாத்தி யோசித்த 90’s கிட்ஸ்

90களில் பிறந்தவர்கள் சிறுவயதில் இந்த மிட்டாய்களை வாங்கி உண்டு மகிழ்ந்திருப்போம். இதன் பின்னர் இந்த பொருட்கள் எங்கும் கிடைப்பதில்லை. ஆனால் மாநகர பகுதியில் இந்த கடையை பார்த்த உடன் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொருட்களை தேடித் தேடி வாங்குவதுடன் பழைய நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிரும் தன் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு கொடுப்பதற்கும் வாங்கிச் செல்வதாக தெரிவிக்கின்றார்கள்.

2k கிட்ஸ் என்று சொல்லக் கூடிய 2000 பிறந்தவர்கள் பல மிட்டாய்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முதல் முறையாக நிலையில் தற்போது இந்த பொருட்களை பார்ப்பதுடன் வாங்கி வைக்க முடிகிறது என்று தெரிவிக்கிறார்கள்.

புதிய பேருந்து நிலையம் செல்லும் பைபாஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ள கடையைப் பார்த்து செல்லும் பலரும் விரும்பி வந்து வாங்கிச் செல்கிறார்கள். பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்கும் பலரும் பிறந்தநாள் விழா என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள்.

இதனால் நல்ல வியாபாரம் இருப்பதாகவும் கூறுகின்றனர் கடை ஊழியர்கள். இதில் கமரகட்டு, தேன்மிட்டாய், இலந்தபழம், ஜவ்வு மிட்டாய், கல்கோனா என்று அறுபது வகையான 90கிட்ஸ் மிட்டாய் வகைகளும், பம்பரம், காத்தாடி, கோலிகுண்டு, ராஜா ராணி பொம்மை போன்ற விளையாட்டுப் பொருட்களும், 30க்கு மேற்பட்ட பொருட்கள் என 75க்கும் மேற்பட்ட பொருட்களை கடையில் விற்பனைக்கு வைத்துள்ளார்கள்.

கல்கோனா மிட்டாய், தேன் மிட்டாய், இலந்த பழம், ஜவ்வு மிட்டாய் என்று ஃபேவரைட் தின்பண்டங்கள் இந்த தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படுகின்றன. தற்போது ஒவ்வொரு ஊர்களிலும் ஆங்காங்கே விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தனியார் உணவகம் மற்றும் டீக்கடை என்று நடத்தி வருபவர்களும், ஊரடங்கு அமல் செய்யப்பட்ட பிறகு டீக்கடை தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், மாற்றுத் தொழிலாக பலரிடமும் ஆலோசனை கேட்டு இறுதியாக நண்பர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பார்த்த பதிவுகளின் அடிப்படையில் 90 கிட்ஸ் எண்ணங்களையும் நீங்கா நினைவுகளையும் பிரதிபலிக்கும் விதமாக 90களில் பிறந்த குழந்தைகள் உண்டு மகிழ்ந்த மிட்டாய்கள், இனிப்பு பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் கொண்ட கடையைத் திறக்கலாம் என்று முடிவு செய்து பலரும் முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியே எங்கும் செல்ல முடியாத காரணத்தால் வருமானம் குறைவதாலும் ஏழை, எளிய மக்களும் இந்த எளிமையான தின் பண்டங்களை வாங்க ஏதுவாக இருக்கும் என்று பலரும் இந்தக் கடையை தொழிலாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *