ஐநா விருது பெற்ற கேரள சுகாதாரத்துறை
மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அதிகரித்த காலகட்டத்திலும் எளிதில் பரவாத நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினோம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ஐநா விருது
ஐநா விருதுக்கு காரணமாக இருந்த அனைத்து சுகாதார துறை ஊழியர்களுக்கும் அமைச்சர் சைலஜா வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த விருது எங்களுடைய ஓய்வற்ற பணிகளுக்கு கிடைத்த பாராட்டு என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலஜா முதன் முறையாக கேரள அரசு பெரும் சர்வதேச அங்கீகாரம் இது தான். உலகம் முழுவதும் நோய்களை கட்டுப்படுத்தும் சேவைகளுக்காக பாராட்டப்படும் 7 சுகாதார அமைச்சகங்களில் கேரளாவும் ஒன்றாக இருக்கிறது.
கேரள மாநில சுகாதாரத் துறைக்கு ஐநா விருது
கடந்த 2010 ஆம் ஆண்டில் தொற்றாத நோய்கள் மற்றும் மன நோய்களை கட்டுப்படுத்திட கேரள அரசின் பணிகளுக்கு இந்த விருது பாராட்டுகளை தெரிவித்துள்ளன. தொற்றாத நோய்கள் மற்றும் மன நோய்களை கட்டுப்படுத்துவதில் சிறந்த பங்களிப்புக்காக கேரள மாநில சுகாதாரத் துறைக்கு ஐநாவின் சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.
மக்களுக்கான சுகாதார பணிகளில் முன்னணியில் உள்ள கேரள அரசின் பங்களிப்பை பாராட்டி UNIATF என்ற விருதை உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ராய்சஸ் அறிவித்துள்ளார்.