சமையல் குறிப்பு

ஓமன குட்டி போல பொலிவு பெற இதெல்லாம் சாப்பிடுங்க..!!

ஸ்பெஷல்ஸ். கேரளா ஸ்பெஷல். வித விதமான சாம்பார் எப்படி வைப்பது என்பதை பற்றி மேலும் பார்க்கலாம்.

கடலைப் பருப்பு சாம்பார்

தேவையானவை : கடலைப் பருப்பு 100 கிராம், நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி, ஒரு பெரிய கப் 150 கிராம் அளவு. சின்ன வெங்காயம் உரித்தது 10, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் தலா கால் டீஸ்பூன். சீரகம் அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 5, கறிவேப்பிலை சிறிது, உளுந்தம் பருப்பு அரை ஸ்பூன், தேங்காய் பால் கால் டம்ளர், கொத்தமல்லி சிறிது, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: கடலைப் பருப்புடன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம், காய்கறிகள் சேர்த்து குக்கரில் வேகவிடவும். எண்ணெய் விட்டு, காய்ந்ததும், காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம்பருப்பு, தாளித்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சேர்த்து வதக்கவும். இதில் வெந்த பருப்புகளை சேர்த்து, உப்பு சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான கடலைப் பருப்பு சாம்பார் தயார்.

பாகற்காய் சாம்பார்

தேவையானவை : துவரம் பருப்பு நூறு கிராம். பாகற்காய் நூறு கிராம் நறுக்கியது, வெல்லம் சிறிய துண்டு, புளிக்கரைசல் கால் கப், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு, தேவையான அளவு.

வறுத்தரைக்க : காய்ந்த மிளகாய் 5 தனியா ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன் கடலைப் பருப்பு சீரகம் தலா அரை ஸ்பூன் சிறிது எண்ணெய் அனைத்தும் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க : கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை ஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை : துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக்கொண்டு, பாகற்காயை வட்ட வடிவமாக வெட்டி அரிசி கழுவிய நீரில் சிறிது ஊற வைத்து எடுத்தால் கசப்பு அதிகம் தெரியாது, புளி கரைசலை கொதிக்க வைத்து, நறுக்கிய பாகற்காய் போட்டு வேகவிடவும். உப்பு வறுத்த பொடி ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, சாம்பாரில் சேர்த்து கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

கேரளா கூட்டு காய் சாம்பார்

தேவையானவை : துவரம் பருப்பு 50 கிராம், சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய், முருங்கைக்காய், பூசனி, பின்ஸ் கலவை 50 கிராம், தக்காளி ஒன்று நறுக்கியது, சின்ன வெங்காயம் உரித்தது 10, பூண்டு தோல் உரித்தது 5 பல், புளிக்கரைசல் கால் டம்ளர், வெந்தயத் தூள், தனியாத்தூள் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு தேவையான அளவு.

தாளிக்க : கடுகு, வெந்தயம், தலா கால் ஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை : மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயத்தூள், தக்காளி ரெண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இலையை நறுக்கி கொள்ளவும், சிறிது எண்ணெயில் பூண்டு, மீதமுள்ள வெங்காயத்தை போட்டு, வதக்கி காய்கறிகளை சேர்த்து வேக விடவும். வெந்தய தூள், மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு, காய்கள் வெந்ததும், பருப்பு கலவையுடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கூட்டுகாய் சாம்பார் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *