கில்லியாக செயல்படும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால்
டில்லி மாநில அரசாங்கம் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இரு மருத்துவ சாதனங்களை பற்றி அறிவுறுத்துகின்றனர். ஆக்ஸிஜன் அளவை (ஆக்ஸிமீட்டர்) மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அவையே அந்த இரு இயந்திரங்கள்.
இயந்திரம்
ஆக்சிஜன் அளவை என்பது ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை அளவிடுவதற்கான ஒரு சிறப்பு இயந்திரம் மற்றும் ஆளவெடுக்கப்பட்ட ஆக்சிஜன் குறைவாக இருந்தால் அதனை சமநிலை படுத்துவதற்கான இயந்திரமே ஆக்ஸிஜன் செறிவூட்டி.
தலைநகர்
தேசிய தலைநகரில் அதிகரித்து வரும் COVID-19 வழக்குகள் மத்தியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 22 திங்கள் அன்று, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் ஆக்ஸிஜன் செறிவு அளவை தவறாமல் கண்காணிக்க துடிப்பு ஆக்சிமீட்டர்கள் வழங்கப்படும் என்று கூறினார்.
செயல்பாடு
இந்த இரு கருவிகளையும் எவ்வாறு என் நிலையில் பயன்படுத்த வேண்டும் என விரிவித்துள்ளார் தலைநகரின் முதல்வர் கெஜ்ரிவால்.
“ஆக்ஸிஜன் அளவு திடீரென வீழ்ச்சியடைவதே நாம் கொரோனாவில் கண்ட மிகப்பெரிய பிரச்சினை. சில நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் நிலைகளை கண்காணிக்க ஆக்சிமீட்டர்கள் வழங்கப்படும்.
வீட்டில் தனிமைப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட ஆக்சிடெண்ட் மீட்டரை வைத்து கண்காணிக்கும் போது ஆக்சிஜன் அளவு குறைவான நிலையை அடைந்த்ல் அந்த நோயாளிக்கு உதவும் யாரேனும் அரசு கொடுக்கும் தொலைபேசி எண்ணுக்கு அணுகவும்.
அரசுத் தரப்பில் மருத்துவ குழுவினர் ஆக்ஸிஜன் செறிவூட்டியுடன் உடனடியாக அங்கு வந்தடைந்து தகுந்த முன் உதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுவுடன் இந்த கருவி அமைக்கப்பட்டுள்ளது.” என விளக்கியுள்ளார்.
தலைநகரின் நிலை
“தற்போது, டில்லியில் சுமார் 25,000 கொரோனா வழக்குகளும், 33,000 மீட்கப்பட்டவர்களும் உள்ளனர். மருத்துவமனைகளில், 6,000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 12,000 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு, 24,000 கொரோனா வழக்குகள் இருந்தன.
மீட்பு விகிதம் அதிகரித்து வருகிறது, தற்போது, நிலைமை கட்டுக்குள் வருவது போல் தெரிகிறது. நாங்கள் முன்பு இருந்ததைவிட மூன்று முறை பரிசோதிக்கிறோம். இப்போது பரிசோதனைக்கு உட்படுத்துவதில் யாரும் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளக்கூடாது ” என மேலும் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
தலைநகரில் நல்ல பதிலுக்காக காத்திருக்கின்றனர் மக்கள்.