கீர்த்தி சுரேஷின்பென் குயினுக்கு அடுத்து சூப்பர்ஸ்டார்களுடன் கலக்கவுள்ளார்..
கீர்த்தி சுரேஷின் அடுத்த அசத்தலான படமாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கீர்த்தி சுரேஷின் பென்குயின் படம் ரிலீசானது ஓடிடியில் ரிலீசாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வருகின்றது விமர்சனங்கள் அங்குமிங்கும் கலவையாக இருந்தாலும் கீர்த்தி ஏன் இந்த நடிப்பு அவருடைய திரில்லர் திரைப்பட மெனக்கெடலும் ரசிகர்களிடையே பெரும் அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது இதனால் கீர்த்திக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் கொரோனா காரணமாக இந்த படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இரு சூப்பர் ஸ்டார்களுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்
திரையரங்குகளில் வெளியான கீர்த்தி சுரேஷின் கடைசி படம் சர்க்கார் அதன்பிறகு OTTயில் தற்போது பெண்குயின் ரிலீஸாகியுள்ளது.
ஒரு கதை சொல்லட்டுமா சார்!
பெண்குயின் கதாநாயகிக்கு கதை கேட்பது ரொம்ப புடிக்குமா. ஈஸ்வர் கார்த்திக் கிட்ட பெண்குயின் படத்தோட கதையை நான்கு அரை மணி நேரம் கீர்த்தி சுரேஷ் கேட்டு இருக்காங்களாம்.
கடும் குளிர் தேனி கொட்டுதல் என பல பிரச்சனைகளுடன் பென்குயின் ஷூட்டிங் நடந்ததுள்ளது. கர்ப்பிணிப் பெண்ணாக வரும் சீன்களில் வெஸ்டர்ன் வேருடன் தொப்பையை சமாளிப்பது சவாலாக இருந்ததாக கூறினார்.
ராட்ஷசன் படம் மாதிரியாக திகிலுட்ட கூடிய படமாக இருக்குமா? என எதிர்பார்த்தால் தாய்மை சம்பந்தப்பட்ட படம் என பேட்டி அளித்துள்ளார்.
கொரோனாவால் பெண்குயின் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாமல் OTT யில் வெளியிட்டதில் பலர் பார்த்துள்ளனர்.
கோலிவுட் சூப்பர் ஸ்டார்
தமிழ்நாட்டு திரை உலகின் தலைவரான ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் இணைகிறார். தலைவருக்கு இணையான கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கும் முடிந்ததும் படத்தின் வேலைகள் தொடங்கும்.
டோலிவுட் சூப்பர் ஸ்டார்
31 மே 2020 தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தன்னுடைய அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தந்தையும் மகனும் இணையும் படம். மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா அவர்கள் தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் என பன்முக வித்தகர். மே 31 மகேஷ் பாபுவின் தந்தை மற்றும் படத்தில் நடிக்கும் தோழனின் பிறந்த நாளாக இருக்க படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
போஸ்டரில் மகேஷ்பாபு கழுத்தில் ஒரு ரூபாய் நாணயத்தின் டடூ பொருத்தி இருக்கிறார். ஸ்ருதி ஹாசனை இப்படத்தின் கதாநாயகியாக பேச்சுவார்த்தை ஒரு புறம் இருக்க தற்போது கீர்த்தி சுரேஷ் கன்ஃபார்ம் செய்துள்ளனர்.
சர்க்காருக்கு பிறகு சர்க்காரு வாரி பட்டா நடிக்கும் கீர்த்தி சுரேஷ். மகேஷ் பாபு உடன் இணைந்து நடக்கும் படத்தின் பெயர் சர்க்காரு வாரி பட்டா. ஊரடங்கு முடிந்தால் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டாருடன் கீர்த்தி சுரேஷுக்கு படம் லைன் கட்டி நிக்குது.
பிரச்சனை முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்னுடைய தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இது கீர்த்திக்கு மகேஷ்பாபுவுடன் முதல் படமாகும் இப்படத்தினை பரசுராம் இயக்குகிறார் மைத்திரி ஃபிலிம் மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர் தற்போதைக்கு கீர்த்தி ரங்கோலி மரக்கர் இந்தச் இந்தியா குட்லக் சக்தி போன்ற படங்கள் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ரஜினியுடனான அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகின்றார் ஹைதராபாத் சூட்டிங்கில் ஒரு சில நாட்கள்தான் இவரது படப்பிடிப்பு அமைந்துள்ளது அண்ணாத்த படமானது நயன்தாரா மீனா குஷ்பூ போன்ற நடிகர்கள் நடித்து வருகின்ற படமாகும் சிவா இயக்குகிறார்