உங்க சமையலறையை பளபளன்னு வைக்க இதோ டிப்ஸ்..!!
அலுமினிய பாத்திரங்கள் பளபளப்பாக வைத்திருக்க அதனுள் ஆப்பிள்களை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, பின் சுத்தம் செய்யலாம்.
செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்ய தக்காளி விழுதை கொண்டு பாத்திரத்தின் மேல் பூசி பின்பு தேய்த்து கழுவவும். இது பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு சுலபமான வழிமுறை ஆகும்.
நான் ஸ்டிக் ஃபேன் அல்லது பாத்திரங்கள் படிந்த கறைகளை அகற்றுவதற்கு தண்ணீரில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து பாத்திரங்களை பத்து நிமிடங்கள் அந்த நீரில் கொதிக்கவிட்டு எடுக்கலாம். இதனால் கறைகள் அகன்று விடும்.
காய் வெட்ட பயன்படுத்தும் பலகையை சிறிது சமையல் சோடா, உப்பு கொண்டு தேய்ப்பதால் அதன் வாடை நீங்கும்.
சமையல் பாத்திரங்களை எப்பொழுதும் கோதுமை மாவு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்பு கலந்த கலவையை பூசி தேய்த்துக் கழுவுவதால், பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். எலுமிச்சை பழத் தோலை போட்டு கொதிக்க வைத்து பின் தேய்த்து கழுவலாம்.
ஒரு தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து பின் அலுமினிய பாத்திரங்களை சுத்தம் செய்து உபயோகப் படுத்தலாம். பாத்திரங்களில் உள்ள கரைகளை நீக்க சிறிது பவுடர் கலந்த நீரில் ஊற வைத்து பின் தேய்த்து எடுக்கலாம்.
தேநீர் கரையை அகற்ற எலுமிச்சை பழத்தில் சிறிது உப்பு சேர்த்து தேய்த்து எடுத்தால் அதை எளிதில் நீக்க முடியும். பாத்திரத்தில் உள்ள உணவு பொருட்களை அகற்ற அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு அதன் மேல் சுடு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வைத்து பின்பு கழுவ அடிப் பிடித்த உணவுப் பொருட்கள் ஈஸியாக அகன்றுவிடும்.
பீங்கான் பொருட்கள் காபி மற்றும் தேநீர் கரைகளை அகற்ற ஆப்ப சோடா உபயோகப் படுத்தலாம்.
வீடு மாறும் போது குளிர்சாதன பெட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் நூல் சிறிது முகப் பவுடரை தூவி விடவும். இவ்வாறு செய்வதால் சில நாட்கள் கழித்து திறக்கும் போது எந்தவித துர்நாற்றமும் இருக்காது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் உள்ளே உள்ள கிருமிகள் அழிந்து விடும்.
ஓரிரு நாட்கள் கழித்து வெங்காயத்தை எடுத்து விடலாம். குளிர்சாதன பெட்டியில் உள்ள துர்நாற்றத்தை போக்க சில எலுமிச்சை பழத் துண்டுகளை ஏதாவது ஒரு அடுக்கின் மேல் வைக்கலாம் அல்லது சிறிதளவு பேக்கிங் சோடாவை சிறு துவாரங்கள் கொண்ட டப்பாவில் போட்டு உள்ளே வைக்கலாம். குளிர்சாதனப்பெட்டியில் எந்தவித நாற்றமும் இல்லாமல் இருக்க சமையல் சோடா அல்லது வினிகரைக் கொண்டு சுத்தப்படுத்துங்கள்.