உங்கள் எதிரி பார்த்திருங்க..
மரபணு ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், எப்படி கோபத்தின் தன்மை மாறுபடுகிறது. அது போல பாலின ரீதியாகவும் போவதற்கான காரணங்கள் வேறுபடுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றது.
பெண்களைப் பொருத்தவரை நெருக்கமான உறவு முறைகள் இடமிருந்து சரியான அங்கீகாரமும், சரியான கவனிப்பு கிடைக்காத போதும், பாரபட்சமாக நடத்தப்படும் போதும், கோபத்தை ஏற்படுத்தி விடும். அதாவது பெண்கள் உணர்வு சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதோடு, உணர்வு ரீதியாக அதிகம் காயப்படவும் செய்கின்றனர்.
அமெரிக்கா குழந்தைகள் பிற குழந்தைகளை விட அதிகம் கோபம் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயது பாலினம் மற்றும் சமூக கலாச்சாரம் ஆகியவற்றை பொருத்து மாறுபடும் சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். கோபம் எப்படி வரும் என்பது தெரியாது. ஆனால் வந்துவிட்டால் இடத்தின் சூழல் கூட தெரியாது.
பெரிய பிரச்சினைகள்
நம்மை நாமே அறியாமல் போய் விடுகிறோம். அது தான் கோபம். ஆண்களைப் பொருத்தவரை தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை அமைப்புகள் சரியான முறையில் இயங்காவிட்டால் சமூக அளவிலான பெரிய பிரச்சினைகள் குறித்து கோபம் பெரும்பாலும் அடைகின்றார்கள். ஒட்டுமொத்த சமூக சூழல் ஏற்படும்போது
உடல் நல இழப்புகளும் மிக அதிகமாகும். அளவுக்கதிகமாக கோபமாக இருக்கும் போது, உங்கள் இருதயத்தை ஒரு முறை தொட்டுப் பாருங்கள். வேகமாக துடிக்கும். இதனால் இருதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கோபத்தை கட்டுப்படுத்தும் போது அவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இருதய நோய்
இருதய நோய் மற்றும் இது தொடர்பான பிரச்சினைகள் வரை இரண்டு மடங்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர். அடிக்கடி கோபம் கொள்பவர்கள் கொழுப்பு, சர்க்கரை வியாதி இருந்தால் பாதிப்பு அதிகரிக்கும். கோபம் வரும் போது இரத்த அழுத்தம் அதிகமாவதால் தற்காலிக மன உளைச்சலையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
நோய் எதிர்ப்புத் தன்மை
உடலின் சமச்சீர் தன்மை சீர்குலைந்து நாளடைவில் நோய் எதிர்ப்புத் தன்மையை சிறிது சிறிதாக இழக்க வைக்க செய்கிறது. எந்த இடத்தில் யாரிடமும் கோபப்பட வேண்டும் என்ற தெளிவு இல்லாத பல சமயங்களில் கோபம் நமக்கு எதிரியாய் மாறுகின்றது. சரியான விஷயத்திற்கு சரியான அளவில் சரியான இடத்தில் கோபம் கொள்வது இல்லை என்பதை நம்மில் பலரிடையே இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.
சற்று சிந்தித்துப் பார்த்தோம் என்றால் நாம் கொள்கிற கோபத்தில் 90% எவ்வித காரணமும் இருக்காது. இரண்டு நபர்களிடையே ஏற்படக் கூடிய தேவை இல்லாத கோபம் ஏற்படும் என்றால் நட்பை பிரித்து விடும். குடும்ப உறுப்பினர் களிடையே அடிக்கடி கோபம் கொண்டால் உறவில் விரிசலை ஏற்படுத்த கூடிய வாய்ப்பு ஏற்படும்.
எனவே கோபம் கொள்ளும் போது மனதை திடப்படுத்தி, அமைதிப்படுத்தி சற்று நேரம் இருந்தால் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போக வாய்ப்பு உள்ளது. முயற்சி செய்தால் எதுவுமே சாத்தியம் தான். நம் எதிரியை விட்டொளிப்போமா?