உங்க ஹோம் பெஸ்ட் லுக்காக இருக்க வேண்டுமா?
உங்கள் வீட்டை எப்பொழுதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ் இதோ. பிரிட்ஜில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு க்ரீன் டீயின் இலைகளை ஒரு பவுலில் போட்டு அதனை ஃப்ரிட்ஜில் வைத்தால் துர்நாற்றம் போய்விடும். இதே போல் எலுமிச்சை பழத்தை வெட்டி பிரிட்ஜில் வைத்தாலும் துர்நாற்றம் வராது.
ஸ்டைன்லேஸ் ஸ்டீல் பொருட்களை வெள்ளரிக்காய் கொண்டு தேய்த்தால் அந்தப் பாத்திரங்கள் பொலிவோடு மின்னும். கப்புகளில் உள்ள கறைகளை போக்குவதற்கு வெள்ளை வினிகர் கொண்டு தேய்த்தால் கப்புகளில் உள்ள செராமிக் போகாமல் கறைகள் மட்டும் நீங்கும். பாத்திரம் கழுவும் தொட்டியை பளிச்சென்று இருக்க எலுமிச்சை சாரை கொண்டு தேய்த்துக் கழுவலாம். அழுக்கு நீங்குவதுடன் துர்நாற்றமும் போய்விடும்.
ஜன்னல்களை வெங்காயத்தைக் கொண்டு துடைத்து எடுப்பதால் எண்ணைப்பசை தூசிகள் கறைகள் நீங்கிவிடும். பாத்திரங்களை உள்ள கருமையை நீக்க காபி பொடியை பயன்படுத்தி கழுவ வேண்டும். துருப்பிடித்த பொருட்கள் மீது உருளைக்கிழங்கு கொண்டு தேய்த்தால் துரு நீங்கி விடும். வீட்டில் பூச்சி தொல்லைகள் அதிகமாக இருந்தால், ஈ விரட்டுவதற்கு ஒரு கிண்ணத்தில் கற்பூரத்தை போட்டு வைத்தால் ஈக்களின் தொல்லை இருக்காது,
கரப்பான் பூச்சியை கோதுமை மாவுடன், கொஞ்சம் போரிக் பவுடரை சிறிதளவு நீரும் சேர்த்து கலந்து உருண்டை பிடித்து கரப்பான்பூச்சி இருக்கும் இடத்தில் வைத்தால் கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது. கொசு நான்கைந்து பூண்டு விழுதுகளை நசுக்கி வெந்நீரில் காய்ச்சி அந்த நீரை வீடு முழுக்க தெளித்தால் கொசு தொல்லை இருக்காது. வெள்ளை வினிகரை தெளித்தால் எறும்புகள் தொல்லை இருக்காது. தினமும் தரையை பெருக்கும்போது சுவர்களில் இணைப்பு பகுதியில் ஒட்டடை அடித்தால் சிலந்தி வலைகள் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும்.
தரையை துடைக்கும் போது வீட்டில் உள்ள sofa – யும் மெல்லிய துணியால் துடைக்கலாம். சமையலறைக்குள் தேவையற்ற பொருட்கள் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி பயன்படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். படுக்கை அறையை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும். தூசுக்கள் அழுக்குகள் படர்வது சுவாச கோளாறு போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
படுக்கையிலிருந்து எழுந்தவுடன் போர்வைகளை ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது படுக்கை அறையை தூய்மை படுத்துவது அவசியம். தரையில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்து நீரை வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.
எண்ணெய் பிசுக்கு நீங்க சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணெய்ப் பிசுக்கு போக கரையை ஐஸ்கட்டி உடன் மென்மையான ஸ்பாஞ்ச் கொண்டு சுத்தம் செய்யலாம். இதனால் தரை குளுமை அடைவதோடு பளிச்சென்று இருக்கும். முட்டை மஞ்சள் கருவுடன் சிறிது வினிகர் சேர்த்து பசை போலாக்கி இவற்றை கரைகள் சிராய்ப்புகள் உள்ள பர்னிச்சர் களின் மேல் பூசிவிட்டு சில நிமிடங்களுக்கு பிறகு துடைத்து எடுத்தால் சிராய்ப்பு மறைந்துவிடும். முட்டைக்கு பதிலாக மெழுகையும் தேய்க்கலாம்.
அடுப்பு மேடை, பாத்திரம் தேய்க்கும் தொட்டி, தினம் தரையையும் வாரம் ஒருமுறை சமையலறை ஜன்னல்களையும், தவறாமல் சுத்தம் செய்யவேண்டும், சமைக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் சிங்கை ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், வரவேற்பறை சிறியதாக இருந்தாலும் அகலமாகக் காட்டும் திறன் கண்ணாடிகளுக்கு உள்ளன, வரவேற்பறையின் மத்தியில் டீப்பாய் வைத்து அலங்கரிப்பது அவசியம், மரத்தால் செய்யப்பட்டதாக இல்லாமல் கண்ணாடி டீ பாயாக இருந்தால் உங்கள் வரவேற்பறை விஸ்தாரமாக காட்சியளிக்கும்.