ஆரோக்கியமான பாரம்பரிய கருப்பட்டி பொங்கல்
தித்திக்கும் கருப்பட்டி பொங்கல். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான பாரம்பரிய உணவாக கருப்பட்டி விளங்குகிறது. சர்க்கரை, வெல்லம் இவற்றிற்கு பதிலாக கருப்பட்டியை வைத்து பொங்கல் செய்யலாம்.
கருப்பட்டி பொங்கல்
தேவையான பொருட்கள் : ஒரு கப் கருப்பட்டி, கால் கப் பாசிப்பருப்பு, ஒரு கப் பச்சரிசி, முந்திரி பத்து கிராம், உலர் திராட்சை 10 கிராம், 5 ஸ்பூன் நெய். மூன்று ஏலக்காய்.
செய்முறை :
ஸ்டெப் 1 முதலில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு ஆறியதும் வடிகட்டி எடுத்து வைக்கவும்.
ஒரு குக்கரில் ஊறிய அரிசி, பருப்பு சேர்த்து நன்றாக குழைய வேக வைத்து 5 விசில் விட்டு இறக்கவும்.
ஸ்டெப் 2 விசில் ஆறியதும் ஏலக்காய் தட்டி சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். வடிகட்டிய கருப்பட்டி தண்ணீரை கலந்து நன்றாக கொதிக்க வைத்து கலந்து விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விடுங்கள்.
2 ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கிளறி. ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும், அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதை பொங்கலில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
ஒரு டீஸ்பூன் நெய் விட்டு நன்றாக கிளறி இறக்குங்கள். சூடான சுவையான ஆரோக்கியமான கருப்பட்டி பொங்கல் தயார். இந்த பொங்கலை செய்வதற்கு குறைந்தது அரை மணி நேரங்கள் ஆகும்.