சினிமா

தளபதி விஜயை சர்ச்சையாக பேசிய நடிகர் கருணாகரன்!

கொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியா முழுவதும் வருகின்ற மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் தங்களுடைய தொழில்களை இழந்து ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படும் நிலை உண்டாகி உள்ளது. இதனால் பல தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களுடைய நிதி உதவியை பிரதமருக்கும், முதல்வருக்கும் வழங்கி வருகின்றனர். ஒரு சிலர் நேரடியாக தங்களுடைய உதவிகளை ஏழை,எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் தல அஜித் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கும், முதல்வரின் நிவாரண நிதிக்கும் மற்றும் பல்வேறு தரப்பினருக்கும் வழங்கினார்.

நடிகர் விஜய்

அவரைத் தொடர்ந்து தளபதி ஒரு கோடி 30 லட்சம் ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கும், முதல்வர் நிவாரண நிதிக்கும் மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்த அனைத்து மாநிலங்களுக்கும் உதவியிருக்கிறார். தளபதி மட்டும்தான் தென்னிந்தியாவை சேர்ந்த அனைத்து மாநிலங்களுக்கும் உதவியிருக்கிறார் என்ற பெயரையும் பெற்றார். மிகவும் கஷ்டப்படும் விஜய் ரசிகர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய் 5 ஆயிரத்தை தனது வங்கி கணக்கில் இருந்து நேரடியாகவும் அனுப்பியிருக்கிறார். மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கூட இல்லாமல் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுமாறு தன்னுடைய விஜய் நற்பணி மன்ற தலைவர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார். அந்தவகையில் பாண்டிச்சேரி முதல்வருக்கு  ரூபாய் ஐந்து லட்சத்தை நிதி உதவியாக விஜய் கொடுத்துள்ளார்.

பாண்டிச்சேரி முதலமைச்சர்

இதற்கு அம்மாநில முதல்வரும் தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல் தளபதி விஜய் போலவே மற்ற திரை பிரபலங்களும் உதவ முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அந்தப் பதிவிற்கு நடிகர் கருணாகரன், நடிகர் விஜய் சம்பளம் போலவே எங்களுக்கும் சம்பளம் கிடைத்தால் நாங்களும் உதவி பண்ணி இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்தப் பதிவை தன்னுடைய ஒரு லட்ச ரூபாயை ஐபோனிலிருந்து பதிவிட்டிருக்கிறார். இதனை பல பேர் விமர்சித்து வருகின்றனர் மற்றும் விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரன் மீது மிகவும் ஆவேசமாக உள்ளனர். தங்களுடைய தளபதி 25 வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு நல்ல இடத்தில் தற்பொழுது இருக்கிறார் என்றும் அவரை இந்த மாதிரி எல்லாம் விமர்சிப்பது சரியல்ல என்றும் விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நடிகர் கருணாகரனின் இந்த பதிவினை பற்றிய கருத்துக்களை பதிவு பண்ணுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *