ஆன்மிகம்செய்திகள்தேசியம்

கார்த்திகை பௌர்ணமி குரு நானக் ஜெயந்தி

சீக்கியர்களின் மதகுருக்களில் முக்கியமானவர் குரு நானக் ஆவார். இவரின் பிறந்தநாளே குரு நானக் ஜெயந்தி. குரு நானக் ஜெயந்தி என்பது குருபுராப் மற்றும் குருநானக் பிரகாஷ் உற்சவம் என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

குருநானக் ஜெயந்தி

சந்திரமான வருஷம் என்று சொல்லப்படும் சந்திரனின் போக்கை ஒட்டி கணிக்கப்படும் வருஷத்தில் கார்த்திகை மாத பௌர்ணமி குரு நானக் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

குரு நானக் அவர்களின் பிறந்த நாள் தேதியை பின்பற்றாமல் கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமி தினமே இவர் பூமியில் அவதரித்த நாளாகும். அதுவே குரு நானக் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

பண்டிகையின் முக்கியம்

குரு நானக் ஜெயந்தி சீக்கியர்களின் மிகப் பெரிய திருவிழா மற்றும் மிக முக்கியமான மத விழாவாகும். இந்த பண்டிகை உலகம் முழுவதும் ஆடம்பரமாகவும், பிரார்த்தனைகளுடனும், பழக்கவழக்கங்களுடனும் கொண்டாடப்படுகிறது.

அம்ரிஸ்டர் தங்க கோவிலில் குரு நானக் ஜெயந்தி கொண்டாட்டம்

குரு நானக் ஜெயந்தி சீக்கியர்களுக்களின் பண்டிகையாக இருந்தாலும் இந்த நாள் குரு நானக் அவர்களின் வாழ்க்கை பற்றிய போதனைகளை நினைவுகூர்ந்து அதனை வாழ்க்கையில் பின்பற்ற அறிவுறுத்தும் தினமாக கருதப்படுகிறது.

மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித வாழ்க்கை தர்மத்தின் வழி அமைய வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். குருநானக் அவர்கள் சீக்கிய மதத்தினர் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய போதனைகளாக இவைகளை குறிப்பிடுகிறார்.

பாகுபாடு அற்ற நிலை

மனிதர்களின் சாதி அவர்களின் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது என குரு நானக் அவர்கள் குறிப்பிடுகிறார். மேலும் சாதியற்ற சமூகம் என்பதே சமத்துவ யோசனையாக அவர் குறிப்பிடுகிறார்.

உலகளாவிய சகோதரத்துவம்

குரு நானக் அவர்கள் ஒவ்வொருவரின் நல்லெண்ணத்தை குறித்த செய்தியை நம்பி பரப்பினார். முழு மனிதகுலத்தின் முன்னேற்றமும் நலனையும் குறிப்பிடும் வகையில் “சர்பத் டா பாலா” எனக் குறிப்பிடுகிறார்.

உண்மை பேச வேண்டும்

எந்தவொரு உறவின் அடிப்படை நற்பண்புகளில் ஒன்று எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும். குரு நானக் அவர்கள் எப்போதும் எந்த பயமும் இல்லாமல் உண்மையை பேச வேண்டும் என்பதை போதித்தார். நிலைமை எதுவாக இருந்தாலும், சத்தியத்துடன் உறுதியாக நிற்க வேண்டும்.

சேவா

அனைவருக்கும் சேவை செய்தல். அவரின் கொள்கைகளில் ஒன்றான “வான்ட் சாகோ” என்பது தேவைப்படுபவர்களுக்கு பகிரவும் உதவி செய்வதையும் குறிக்கிறது. ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டோரின் சேவையில் ஈடுபடும்போதுதான் ஒரு மனிதன் தன் வாழ்க்கையின் உண்மையான மதிப்பை அடைகிறான்.

ஆண் பெண் சமநிலை

ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவரின் இந்த போதனை சமுதாயத்தில் நுழைத்து பின்பற்றப்பட வேண்டும்.

எந்த மதமாக இருந்தாலும் நல்லவையாக இருந்தால் அதனைக் கற்று பின்பற்றி கற்பிப்போம். மதத்தால் பலதரப்பட்டாலும் மனிதத்தால் ஒன்றிணைவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *