ஆன்மிகம்ஆலோசனை

கார்த்திகை விரத முறை

கார்த்திகை விரதம் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்திலும், கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியிலும், வெள்ளிக்கிழமை விரதம் வாரம் தோறும் வரும் வெள்ளிக் கிழமைகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை, ஆடி கார்த்திகை, தை கார்த்திகை ஆகிய மூன்று கார்த்திகை நாள் கடைப்பிடிக்கப்படும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இவ்வழிபாட்டை மேற்கொண்டதால் நாரதர், அருணகிரிநாதர், அரிச்சந்திரன், திரிசங்கு, பகீரதன் உள்ளிட்டோர் இவ்விரதத்தை பின்பற்றி வழிபாடு செய்து பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை விரதம் இந்துக்களால் முருகப் பெருமானை மனதில் எண்ணி விரதம் மேற்கொண்டு கடைபிடிக்கப்படும் வழிபாட்டு முறைகள் ஆகும்.

சிவபெருமான் சூரபத்மன் சகோதரர்களின் மூலம் தேவர்களுக்கு உண்டான துயரத்தினை நீங்கும் பொருட்டு தனது தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் ஆகிய முகங்களுடன் ஆறாவது முகமான அதோமுகம் முதலியவைகளில் இருந்து நெருப்பு பொறிகளை உருவாக்கினார். நெருப்பு பொறிகளை அக்னியும், வாயுவும் கங்கையின் சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தனர்.

ஆறு குழந்தைகளாக ஆறு தாமரை மலர்களில் உருவாகினர். அந்த ஆறு குழந்தைகளை கார்த்திகை பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்தனர். ஒருநாள் சிவபெருமான் தம் உமையம்மையும் குழந்தைகளை காண வந்த பொழுது, உமையம்மை ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஒரே குழந்தையாக மாற்றி 6 குழந்தைகளும் ஒரே குழந்தைகளாக மாறிய திருநாளே திருக்கார்த்திகை நாளாகும்.

கார்த்திகையில் முருகப் பெருமானை நினைத்து விரதம் முறையினை மேற்கொண்டு வழிபாடு செய்து வருவதால் வாழ்வின் எல்லா செல்வங்களும் கிட்டும் என்று சிவபெருமான் அருளினார். கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து 12 ஆண்டுகள் பின்பற்றி நாரதர், தேவ ரிஷி என்ற பெரும் பேற்றைப் பெற்றார்.

கொன்றதால் ஏற்பட்ட பாவங்கள் நீங்க உமையம்மை திருக்கார்த்திகை விரதத்தை மேற்கொண்டு விளக்கு ஏற்றி பாவங்கள் நீங்கப் பெற்றதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை விரதத்தை மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு முருகன் அருளால் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *