கார்த்திக்(ஒரு நாளே டாப்பா ஆயிட்டயே) டயல் செய்த எண்…
என்ன ராங் நம்பர் ஆயிடுச்சா!
இல்ல நாட் ரீச்சபிளா!
COVID-19 என பேசத் தொடங்கி கட்டாயிடுச்சு….
அதெல்லாம் இல்லைங்க இது ஒரு குறும்படம் பெயர்.
விண்ணைத்தாண்டி வருவாயா குழுவினரின் ஒர் மாறுபட்ட முயற்சி. கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டினுள் அடைந்து கிடக்கும் மக்களின் பொழுதுபோக்கிற்கு வீட்டின் உள்ளிருந்தே ஒரு குறும்படத்தை மிகவும் அழகாக கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் கொடுத்துள்ளார்.
வின்னைத்தாண்டி வருவாயா படம் காதலில் திளைக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய படம். ஆனால் சோக முடிவை பார்க்க முடியாத மனம் திடம் இல்லாத காதலர்கள் தவிர்க்க வேண்டும். ஒரு படமாக கருதி அதனை ரசிப்பவர்கள் அனைவருக்கும் விருந்தாக அமையும்.
கார்த்திக் டயல் செய்த எண்…
பெயரைக் கேட்கும்போதே இந்த குறும்படத்தின் கதையை யூகித்திருப்பீர்கள்…
அந்த வெள்ளித்திரை படத்தின் தொடர்ச்சியாக இக்குறும்படத்தை அந்த படக்குழுவினரே தந்துள்ளனர். கார்த்திக் கதாபாத்திரத்தில் STR நம்ம சிம்புவும் ஜெஸ்ஸியாக கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்துள்ளனர்.
கதைக்கரு
எழுத்தாளர்களாக இருக்கும் அனைவருக்கும் ஓர் இடத்தில் திக்குமுக்காடி விடுவது பிரத்யேகமாக நடக்கும் ஒரு விஷயம். அதனை மாற்றியமைக்கும் விதமாக பலர் பல வகையான மாற்றத்தை தேடுவர்.
எழுத்தாளராகவும் இயக்குனராகவும் இருக்கும் நம் கதாநாயகன் கதை எழுத வார்த்தை வராமல் திக்குமுக்காடி நிற்கும் சமயத்தில் கதாநாயகியை தொலைபேசியில் அணுகுகிறார். அவர்களுக்கு நடுவில் நடக்கும் உரையாடல் இக்குரும்படம்.
குறும்படத்தின் மற்ற விஷயங்கள்
கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி அவரவர் வீட்டிலிருந்து தொலைபேசியில் பேசிக் கொள்கின்றனர். கார்த்திக் வீட்டின் அமைப்பு ஒவ்வொரு எழுத்தாளரும் நம் வேலை செய்யும் இடம் இவ்வாறு அமையாதா என்று பொறாமையும் ஏக்கமும் படும் அளவிற்கு அருமையாக இருந்தது. அதேபோல் ஜெஸ்ஸி வீட்டின் போர்டிகோ மழை நேரத்தில் நம் குடும்பத்துடன் ஆடுவதற்கு அருமையான ஒரு சூழல்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை அமைத்துள்ளார். அவர் இசையில் காதல் கொள்ளாதவர்கள் எவரும் உண்டோ!!!
மீம்ஸ் உலகத்தில் இக்குறும்படம் ஒரு தீனி
அவ்விருவரும் உரையாடிய பல வார்த்தைகளை பல அர்த்தங்கள் ஆக இருப்பினும் கார்த்திக்கை தன் மூன்றாவது குழந்தையாக பார்க்கிறேன் என்று கூறும் ஜெஸ்ஸியின் டயலாக் மீம்ஸ் உலகத்தில் ஒரு பெரிய வட்டத்தை அடிக்கிறது.
இந்த டயலாக்கை வெவ்வேறு விதமாக போட்டு கிழி கிழி என்று கிழித்து விட்டனர்.
நம் வைகைப்புயல் அல்லெட் ஆறுமுகமாக திரை உலகில் உலா வரும் தலைவர் வடிவேலு அவர்களை வைத்து பல மீம்ஸ்கள் கள்ளக் காதலை சுட்டிக்காட்டும் வகையாக இருந்தது.
ஐயா வடிவேலு அவர்கள் படத்தில் எவ்வாறு ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர்ப் பேச்சு கொடுப்பாரோ அதைப் போன்றே கார்த்திக் ஜெஸ்ஸியின் உரையாடலுக்கு எதிர்ப் பேச்சு கொடுத்து தாக்கியுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.
அறிவுரையில் கிடைக்கும் விஷயத்தை விட சிரிப்புடன் கூடிய செய்திகளில் நாம் அனைவரும் பல விஷயங்களை கற்போம்.
இதுபோன்ற மீம்ஸ்கள் செலவே இல்லாமல் குறும் படத்தை விளம்பரப்படுத்தி விடுகிறது. இவர்கள் கூறும் நக்கல் நையாண்டி தனத்தை புரிந்துகொள்ளவே நாம் குறும்படத்தை பார்க்க வேண்டும் எனும் ஆவலும் தூண்டலும் நமக்கு அதிகரிக்கிறது.
இந்தப் 12 நிமிட குறும்படத்தை பார்க்க வேண்டும் என்றால் இரண்டரை மணி நேர முழு படத்தை பார்த்தால் தான் புரியுமா?
இல்லை…. இதை தனித்து குறும்படமாக பார்க்க ஆண்கள் த்ரிஷாவை ரசிக்க, பெண்கள் சிம்புவை ரசிக்க ரஹ்மானின் காதல் இசையில் நம்மை தொலைக்கலாம்.
ஆக மொத்தத்தில் படம் சூப்பர் டூப்பர் ஹிட்… யூடியூப்-ல #1 ட்ரெண்டிங் பட்டைய கிளப்பிட்டு இருக்கு… நீங்க பார்த்துட்டு ஒரு மீம்ஸ் போடுங்களே