கர்நாடகாவில் கொட்டும் மழை ஒகேனக்கலில் வெள்ளம்
இன்று ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணை மற்றும் அணை ஆகியவைகள் நிறைந்து இருக்கின்றன. அணைகளின் நீர் நிரம்பியதாக கூறப்பட்டிருக்கின்றது.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இது நேரடியாக ஒகேனக்கல் வந்து தமிழ்நாட்டில் வருகின்றது. 60 ஆயிரம் கன அடியாக இருந்தது. அதன் பின்பு படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சம் கன அடியாக ஒகேனக்கல் பகுதி வழியாக வந்தது.
தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீரானது உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் ஐந்தருவி பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த ஆண்டு நல்ல மழை கர்நாடகத்தில் வைத்திருக்கின்றது. அதன் வளைவு ஒகேனக்கலில் வெள்ளக்காடாக காட்சி தருகின்றது. தமிழ் நாட்டிற்கும் நல்ல நீர்வரத்து அதிகரித்து காணப்படுகின்றது. கிட்டத்தட்ட மூன்று அணைகள் நிறைந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.
இது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒன்றாகும். தமிழ்நாட்டிலும் இன்று நல்ல மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு நீருக்கு பஞ்சம் இருக்காது என்ற தகவல்கள் கிடைக்கின்றன. ஆடிப்பட்டம் ஆரம்பித்ததற்கு இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றது.