பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள்..!
குஜராத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு பள்ளிப் பாடத் திட்டத்தில் பகவத் கீதையை அறிமுகப்படுத்த உள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலின் படி, கர்நாடகாவில் அடுத்த ஆண்டு முதல் அனைத்து மதத்தினரும் கற்கும் வகையில் நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்படும். பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் ஆகியவை பாடமாக கொண்டுவரப்படும் என கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராமாயணம், பகவத் கீதை குழந்தைகளிடத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதால், குழந்தைகளின் பாடத்திட்டத்தில் அறநெறி கல்வியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாக அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தை குஜராத்தில் 3 கட்டங்களாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதில் முதற்கட்டமாக பகவத் கீதையை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்றார்.
பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் அறநெறி கல்வியை பாடத்தை அமல்படுத்துவது குறித்து வரும் நாட்களில் சி.எம்.பொம்மையுடன் ஆலோசிப்பேன்,” என்றார். மேலும், “நாங்கள் பள்ளியில் படித்தபோது வாரம் ஒருமுறை அறநெறி கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டன. வரும் நாட்களில் இதை மாநில பாடத்திட்டத்தில் ஏற்க முடியுமா என்று பார்ப்போம்” என்றார்.
கல்வி நிபுணர்களைக் கலந்தாலோசித்து, அறநெறி அறிவியல் பாடத்தின் அம்சங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து முடிவு செய்வோம் என்றார்.