சினிமா பாடல்கள்

கரகாட்டக்காரன் படம் பாடல் மாங்குயிலே….

ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த திரைப்படம். இத்திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது. இத்திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது. இளையராஜாவின் கிராமிய இசையில் கரகாட்டக் கலைக்கு புத்துயிரும் மதிப்பும் பெற்றுத்தந்த திரைப்படமாகும்.

பாடல் வரிகள்:

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத
தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு
கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா
ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து
முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

மேலும் படிக்க : ரசிகர்களின் நேஷனல் கிரஷ் :- சூடேற்றும் ராஷ்மிகா

ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு
முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய்

மேலும் படிக்க : அவள் வருவாளா…நேருக்கு நேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *