கரகாட்டக்காரன் படம் பாடல் குடகு மலை…
ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த திரைப்படம். இத்திரைப்படம் ஜூன் 16, 1989ல் வெளியானது. இத்திரைப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்பட வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது. இளையராஜாவின் கிராமிய இசையில் கரகாட்டக் கலைக்கு புத்துயிரும் மதிப்பும் பெற்றுத்தந்த திரைப்படமாகும்.
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தெம்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்காதோ என் பாட்டே
உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன்
பூ பூத்த சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத தாகம் கொண்டு
பாடும் பாட்டு
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி
மறந்தால் தானே நெனைக்கனும் மாமா
நினைவே நீதானே நீதானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நெனச்சு தவிசேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெக்கு காத்தோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்ன என்ன ஒன்னாக நின்ன என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்ன எண்ணி துடிச்சாளே இந்த கன்னி
வா மாமா