கந்தர் அநுபூதி பாடல்
தைபூசம் நாளை உற்சாகமாக மிகுந்த பக்தியுடன் பழநியில் விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றது. தைபூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால் குடம் எடுத்து கால் நடையாக முருகரை வேண்டி செல்வார்கள். பழநியில் பெரும் மக்கள் கூட்டமாக இருக்கும். தைபூசத்தில் முருகர் வழிபாடு சிறந்தது ஆகும். கந்தசஷ்டியைப் போல் சிறந்தது. கந்தரை நோக்கி கந்தர் அநுபூதி பாடலை பாடி இறை அருளை பெறலாம்.
காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உ ருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்
நூல்
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே. (1)
உ ல்லாச நிராகுல, யோக, இதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)
வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோதயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.(3)
வளைபட்டகை மாதொடு, மக்கள் எனும்
தளைபட்(டு), அழியத் தகுமோ? தகுமோ
கிளைபட்(டு) எழுசூர் உ ரமும் கிரியும்,
தொளைபட்(டு) உ ருவத் தொடு வேலவனே. (4)
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந்து மொழிந்திலனே
அகம், மாயை, மடந்தையர் என்(று), அயரும்
சக மாயையுள் நின்று தயங்குவதே. (5)
திணியான மனோசிலை மீது, உ னதாள்
அணியார் அரவிந்தம் அரும்பு மதோ
பணி யா? என, வள்ளi பதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே. (6)
கெடுவாய் மனனே கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7)
அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட, மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. (8)
மேலும் படிக்க : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தைப்பூசம் ஸ்பெஷல்
மட்Yடுர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்Yடுசல் படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்Yடுடற, வேல் சயிலத்(து) எறியும்
நிட்Yடுர, நிராகுல நிர்ப்பயனே. (9)
கார் மா மிசை காலன் வரின், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே. (10)