சினிமா பாடல்கள்

கண் பேசும் வார்த்தைகள்.. 7G ரெயின்போ காலனி

7G ரெயின்போ காலனி இப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் காதல் திரைப்படம் ஆகும். இதில் ரவி கிருஷ்ணா அறிமுகம் ஆகிறார் இதில் சோனியா அகர்வால் நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ளார். இதில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகள்

கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை (2)

காற்றில் இலைகள்
பறந்த பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம்
மறப்பதில்லை

ஒரு முறைதான்
பெண் பார்ப்பதினால் வருகிற
வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை

காட்டிலே
காயும் நிலவு கண்டு
கொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை

தூரத்தில் தெரியும்
வெளிச்சம் பாதைக்கு சொந்தம்
இல்லை மின்னலின் ஒளியை
பிடிக்க மின்மினி பூச்சிக்கு
தெரியவில்லை

மேலும் படிக்க : விஜயசேதுபதியின் மாஸ்டர் பீஸ்

விழி உனக்கு
சொந்தமடி வேதனைகள்
எனக்கு சொந்தமடி அலை
கடலை கண்ட பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே
சொந்தமடி

கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை

உலகத்தில்
எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும்
கொண்டாடுது ஒரு முறை
வாழ்ந்திட திண்டாடுது இது
உயிர் வரை பாய்ந்து பந்தாடுது

பனி துளி வந்து
மோதியதால் இந்த முள்ளும்
இங்கே துண்டானது பூமியில்
உள்ள பொய்கள் எல்லாம் அட
புடவை கட்டி பெண் ஆனது

ஏ புயல் அடித்தால்
மழை இருக்கும் மரங்களும்
பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து
வரும்

ஒரு முறைதான்
பெண் பார்ப்பதினால் வருகிற
வழி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

ஹே கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை

மேலும் படிக்க : என் கண்ணாடி தோப்புகுள்ளே…. மலபார் போலீஸ் படம்

காற்றில் இலைகள்
பறந்த பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம்
மறப்பதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *