சினிமாசினிமா பாடல்கள்

கஞ்சா பூ கண்ணால… விருமன் படம் பாடல்

விருமன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.விருமன் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் நாயகி அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார், இவர் இயக்குனர் ஷங்கரின் மகள்…

பாடல் வரிகள்:

கஞ்ச பூவு கண்ணால
செப்பு சேல உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால -2

உன் தட்டாங்கையி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடப்பேன்டி
கவட்ட எடுத்து கல்லால

கருப்பட்டி கரச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்டா
பொங்கபான ஒலையா -2

ஈரக்கொலைய சொரண்டியென்ன
கொல்லுறாயே கொலையா -2

கஞ்ச பூவு கண்ணால
செப்பு சேல உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால

மேலும் படிக்க : எம்எஸ் தோனி ஹீரோ தற்கொலைக்கான காரணம்

அந்தி நடுசாமம் எழுப்பி
அந்த நட்சத்திரம் உலுப்பி
உன் மூக்குல காதுல
தோட மாட்டி தொங்க விடப் போறேன்

அந்த ராத்திரிய கிள்ளி
கொஞ்சம் கறுத்த மேகம் அள்ளி
உன் இமைய பூசும் கண்ணு மையா
மாத்திக்கொண்டு நானும் வாரேன்

மாடு குத்தி கிழிச்சாலும்
பொழச்சுக்குவேண்டி
உன் புருவ கத்தி குத்திபுட்டா
என்ன செய்வேண்டி

சூரிக்கத்தி வீசுனாலும்
நிமிந்து நிப்பேன்டி
உன் சுண்டு விரல் பட்டு போனா
சுனங்கி போவேண்டி

நீ மனசு வச்சா மந்தக்கல்லையும்
திண்டு செமிப்பேண்டி -2

கஞ்ச பூவு கண்ணால
செப்பு சேல உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால

உன் தட்டாங்கையி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடப்பேன்டி
கவட்ட எடுத்து கல்லால

மேலும் படிக்க : இஸ்பேட் ராஜாவின் தாறுமாறான போட்டோ ஷூட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *