சினிமாசினிமா பாடல்கள்

கண் ஜாடை காட்டி என்ன… அஞ்சல படம் பாடல்

அஞ்சல (Anjala) தங்கம் சரவணன் இயக்கத்தில் 2016இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1]இசையமைத்திருந்தாதிலிப் சுப்பராயன் படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் விமல் மற்றும் நந்திதா ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ஆண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா சொரனை இல்லை

ஆண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா சொரனை இல்லை

ஆண்: கரும்பாறை உனை
பார்த்து விளைஞ்சேனே
சவுக்காரம் என
நானும் கரைஞ்சேனே

பெண்: என் பேரை நீ சொல்ல
ஏதோ ஆகி போனேனே
சொல் ஏதும் இல்லாம
சேர்ந்தேன் தானே
வாய்க்கால் நான் உன்னால்
வைகை போல ஆனேனே

ஆண்: குத்தீட்டி சிரிப்புல
கொத்தோட வனப்புல
கொன்னாலே
துடி துடி துடி துடிக்க

மேலும் படிக்க : வி அடுத்த ஓடிடி ரிலீஸ்

ஆண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா சொரனை இல்லை

ஆண்: தாயோட வாசம்
அறிஞ்சேனே உனக்குள்ள
தன்னால நான் என்னை
தரப்போறேன் புள்ளை

பெண்: பாதாது கேசம்
உனைச்சேர தடையில்லை
பஞ்சாங்கம் நீ பார்த்து
தொட வேணும் மெல்ல

ஆண்: சிங்கார சீமையே
அண்ணாந்து பாத்திட
மங்காத காதல் பூவை
மாலையாக்கி நான் போட

பெண்: கூட கூட அப்ப வாட
பூத்து போவேன் நீயும் சூட

ஆண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா சொரனை இல்லை

ஆண்: நீ பார்த்த பார்வை
ஒரு நாளும் நரைக்காது
நரை வந்து சேர்ந்தாலும்
அழகை குறைக்காது

பெண்: நீ பேசும் பேச்சு
ஒரு போதும் நடிக்காது
வயசாகி போனாலும்
பழசை மறக்காது

ஆண்: பாக்காத பார்வையும்
கேட்காம கேட்டிட
காயாத ஈரம் போல
காதல் தூறும் நெஞ்சோட

பெண்: ஆசை கூட அன்பு கூட
வாழ்ந்து போவும் கூட மாட

ஆண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த செவத்த புள்ளை ஓ
கால் ரெண்டும் தரையில் இருக்கு
ஆனா சொரனை இல்லை

பெண்: கண்ஜாடை காட்டி என்னை
கவுத்த கலரு பையா ஓ
கலவாணி பயலே உனக்கு
காரணம் விளங்கலையா

ஆண்: கரும்பாறை உனை
பார்த்து விளைஞ்சேனே
சவுக்காரம் என
நானும் கரைஞ்சேனே

பெண்: என் பேரை நீ சொல்ல
ஏதோ ஆகி போனேனே
சொல் ஏதும் இல்லாம
சேர்ந்தேன் தானே
வாய்க்கால் நான் உன்னால்
வைகை போல ஆனேனே

ஆண்: குத்தீட்டி சிரிப்புல
கொத்தோட வனப்புல
கொன்னாலே
துடி துடி துடி துடிக்க

மேலும் படிக்க : ‘கோலமாவு கோகிலா’ மறு தயாரிப்பு, மாற்று மொழியில் வெளியாகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *