படிக்காத மேதை காமராஜரின் பிறந்த நாள் இன்று அவரை நினைவு கூர்வோம்
காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம். இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் திகழ்ந்தது காமராஜரின் ஆட்சி என முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார். கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் என நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம் ஆனது.
மக்களின் நலனுக்காகவே வாழ்ந்த காமராஜரின் பிறந்த நாள் இன்று அவரை நினைவு கூர்வோம். இவர் ஆட்சிக் காலத்தில் தமிழகம் தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் இருந்தன.
அம்பத்தூர், ராணிப்பேட்டை,ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், விருதுநகர், திருச்சி, கிண்டி போன்ற 19 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. தொழில் முன்னேற்றம் தொடர்பாக இவர் வகுத்து செயல்படுத்திய திட்டங்கள் இதன் காரணமாகவே தமிழகம் தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தொழில் வாய்ப்புகள்
கர்மவீரர் காமராஜ் ஆட்சியில் தொழில்துறையில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது. நிலக்கரி சுரங்கம், ரயில் பெட்டி தொழிற்சாலை, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், கச்சா பிலிம் தொழிற்சாலை, வாகன தொழிற்சாலை என பல்வேறு பெரும் தொழில் வாய்ப்புகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டவை.
மதிய உணவு திட்டம்
ஒவ்வொரு துறையிலும் தொலைநோக்குப் பார்வையுடன் இவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் காமராஜரை கர்மவீரர் ஆக்கியது என்றே சொல்லலாம். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை போக்க சீருடைகள், அதுவும் இலவசமாக மதிய உணவு திட்டம், என இளைய சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக வார்த்தெடுக்க சமரசமின்றி அவர் செயல்பட்ட விதம் என்றும் மறவாத ஒன்று.
சிறந்த தலைவராக
ஒரு அரசியல் தலைவராக சிறந்த உதாரணமாக எக்காலத்திலும் நினைவில் வைத்துக் கொள்ளும் சிறந்த தலைவராக போற்றப்படுபவர் காமராஜர். கருப்பு காந்தி, கல்விக்கண் திறந்த, படிக்காத மேதை, தன்னலம் கருதாத, தன் செயல்பாடுகளால் புகழ்பெற்றவர், கர்மவீரர் இப்படி அவரது புகழ் வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.
நீர்பாசனத்திட்டங்கள்
இன்றும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் திட்டங்கள் அனைத்தும் காமராஜர் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
“முதியோர் பென்சன் திட்டம்” அறிவித்து ஏழை முதியோர்களின் வாழ்வில் ஒளியேற்றிய வரும் காமராஜரே.
இவர் வாழ்வில் பல மாற்றங்கள்
குமாரசாமி – சிவகாமி தம்பதியின் மகனாக ஜூலை 15, 1903 ஆண்டு மதுரை அருகே விருதுபட்டியில் பிறந்தவர் காமராஜர். தன் சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டு அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது. சாதாரண துணி கடையில் வேலை பார்த்த காமராஜருக்கு விருதுபட்டியில் கடைவீதியில் அரங்கேறும் விடுதலைப் போராட்டங்களை இவர் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
தன் 16வது வயதில் இந்திய நேஷனல் காங்கிரஸ் கட்சியில் முழுநேர தொண்டராகப் பணியாற்றி 1930 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று சிறை சென்றவர் காமராஜர். இத்தகைய தலைவர்கள் அப்பொழுது இல்லை என்றால், இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகள் கல்வியின்றி தவித்து இருப்பார்கள்.