விக்ரம் பட வெற்றிக்கு இவங்க தான் காரணமா???
கொஞ்ச நாளாவே எங்க திரும்பினாலும் நாம்ம பாக்றது உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை பற்றிய விமர்சனம் தான்.நம்ம கமல்ஹாசன் பிக்பாஸ் இல் வாரத்துக்கு ஒருமுறை வரத பார்க்கவே அவ்ளோ ஆர்வமா இருப்போ… இப்போ அவர் நடிப்புல வெளியாகும் படம் என்று சொன்னால் சும்மாவா இருப்போம் ..நாங்க எல்லாம் poison கிடைச்சாலே பாயசம் மாறி சாப்டுவோ …இப்போ பாயசமே கிடைச்சிருக்கு …அந்த அளவுல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
நம்ம லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ் கமல் தயாரிப்பில் உலக நாயகன் கமல்,விஜய்சேதுபதி , பகத் பாசில், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களின் மிக வேறுபட்ட கதாபாத்திரத்தில், அனிருத் இசையில் ஜூன் 3ஆம் தேதியான இன்று மிக பிரம்மாண்டமாக விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
கதை கருத்து
படத்தின் கதை கருத்தானது, அடுத்த தலைமுறையினர் போதைப் பொருள் இல்லா சமூகத்தில் வாழும் தலைமுறையாக இருக்க வேண்டும் என்ற சமூக சீர்திருத்த படமாக உள்ளது…மக்கள் விரும்பும் கதையாக மட்டும் இல்லாமல் மக்களை தீய பழக்கத்தில் இருந்து காக்கும் படமாகவும் விக்ரம் திரைப்படம் அமைத்து உள்ளது.
விக்ரம் பட விமர்சனம்
வெளியான முதல் நாளே மிகப் பெரிய வெற்றியைப் பெற்று உள்ளது.
உலகநாயகன் கமல் ஹாசன் வரும் ஒவ்வொரு காட்சியும் திரை தீப்பிடிக்கிறது. வில்லனாக வரும் விஜய் சேதுபதி நடிப்பில் தனித்து நிற்கிறார். கமல் ஹாசனுக்கு நிகரான வில்லனாக திகழ்கிறார். வழக்கம் போல் இல்லாமல், வித்தியாசமான நடிப்பு காட்டியுள்ளார்.
மேலும் படிக்க : சினிமா ஃபீல்டுக்கு வந்த சோதனை.. தியேட்டர்கள் அமெரிக்காவில் மூடப்படுகிறது.
படத்தில் குறை என்று கூற எதுவுமே இல்லாத வகையில் அனைவரும் தங்களின் எதார்த்தமான தனித்திறனை நடிப்பில் வெளிப்படுத்தி உள்ளனர்.
விக்ரம் படத்தை பார்த்த நடிகை குஷ்பு பகத் பாசிலிக்கு முத்தம் தரணும் என்று கூறினார்.
படம் னா இது தா படம் .. கண்டிப்பா இந்த ஆண்டின் சிறந்த படமாக விக்ரம் திரைப்படம் அமையும் ..விஜய் சேதுபதி எப்பவும் போல தன்னோட வில்லன் கெத்த நடிப்பில் காட்டிடாரு,
இப்படி ரசிகர்கள் எல்லாருமே பாஸிட்டிவ் கமெண்ட் தா கொடுத்துருக்காங்க….
மேலும் படிக்க : நன்றி தெரிவிக்கும் எம் குமரனின் அம்மா நதியா