சினிமாசின்னத்திரை

பட்டையை கிளப்பிய விக்ரம் டீசர் நன்றி கூறும் அனிருத்

விக்ரம்!

  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் பட்டையை கிளப்பும் நடிப்பில் அடுத்த படம் தயாராகிறது.
  • அனல் பறக்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இவர்களுடன் இணைய உலக நாயகனின் பிறந்த நாளன்று படத்தின் டீசர் உடன் பெயர் வெளியானது.
  • ரசிகர்கள் டீசரை வரவேற்க அனிருத் அதற்கு நன்றி தெரிவிக்கிறார்.

கமல் லோகஷ் அனி

உலக நாயகன் கமலஹாசனின் 232வது திரைப் படத்தை பற்றிய தகவலை செப்டம்பர் மாதம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இந்த படத்தை இளைய தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார் மேலும் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க : சிவலிங்கா படம் பாடல் ரங்கு ரக்கர…

கமல் பிறந்தநாள்

7 நவம்பர் 2020 அன்று தன்னுடைய 66வது பிறந்தநாளை கொண்டாடிய உலக நாயகன் கமலஹாசனுக்கு இப்படத்தின் டீசர் பரிசாக அமைந்தது. விக்ரம் என்ற திரைப்படத்தின் தலைப்பு நிர்ணயிக்கப்பட்டு பட்டையைக் கிளப்பும் பிரம்மாண்ட டீசர் வெளியானது.

டீசர்

தற்போது பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 4 தொகுத்து வரும் உலகநாயகன் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தை கொடுப்பதை விட பன்மடங்கு பிரம்மாண்டத்தை வெள்ளித்திரையில் இந்த டீச்சர் மூலம் தந்துள்ளார்.

பிக்பாஸ் விக்ரம்

சிறிய கற்பனை செய்தோமாயின் டீசரின் ஆரம்பத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியை போன்ற சமையல்காரராக குக்கர் விசலும் வாழை இலையும் பரிமாறி அதன் பின்பு நினைக்க முடியாத அளவிற்கு மாற்றத்தையும் திருப்பத்தையும் கொண்டுவரும் விதமாக டீசர் பரபரப்பாக அமைந்துள்ளது.

தலைவா யூ ஆர் கிரேட்… வீ ஆர் வெயிட்டிங் ஃபார் விக்ரம்.

அனியின் நன்றி

கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த டீசரை ரசித்து ஆதரவு தெரிவித்து வருவதை தொடர்ந்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் நன்றிகளை தெரிவித்து வருகிறார்.

மேலும் படிக்க : கோவக்கார கிளியே…வேல் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *