சினிமா

பட்டையைக் கிளப்பும் கமலின் மகள்

கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் டீசர் யூட்யூபில் வெளியானது. ஒழுக்கமான நல்ல தமிழ் பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளார் அக்ஷரா ஹாசன்.

தல அஜித்தின் விவேகம் படத்தில் நடாஷா என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலக பயணத்தை துவங்கினார் அக்ஷரா ஹாசன். அதனைத் தொடர்ந்து ‌சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தில் நாசரின் மகன் அபி ஹாசனுக்கு துணையான கதாபாத்திரத்தில் படத்திற்கு முக்கிய பங்கு வகித்தார்.

கதாநாயகியாக களமிறங்கும் முதல் படம் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு. பெண்ணிற்கு இருக்கவேண்டிய நான்கு நற்குணங்களின் பெயரை அனைவரும் அறிவோம். இந்த நற்குணங்கள் இருக்கும் பெண்களே நல்ல பெண்களா! என்ற கேள்விக்கு பதிலாக இந்தப் படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் பெரிய பிரபல பட்டாளத்துடன் இந்த படம் பெரிதாக வெளியிடப்படுகிறது. அக்ஷரா ஹாசன், உஷா உதிப், மால்குடி சுபா, அஞ்சனா ஜெயபிரகாஷ், ஷாலினி விஜயகுமார், ஜானகி சபேஷ், கலைராணி, சித்தார்த்தா ஷங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், கீரன் கேஷப் என அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பட்டியல் அடுக்கிக் கொண்டே போகிறது.

ட்ராமா நகைச்சுவை படமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசரில் கண்ணாடி அணிந்து இளம்வயது பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் அக்ஷரா ஹாசனை துரத்தும் சமுதாயம் மற்றும் குடும்பத்தினரின் கேள்விகள். இவை அனைத்தும் கனவாக முடிகிறது என்பது போல் தூக்கத்திலிருந்து எழுகிறார். அக்ஷரா ஹாசன், பவித்ரா என்னும் நல்ல தமிழ் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருக்கே இவ்வாறு இருக்கையில் நிஜ வாழ்க்கையில் வாழ்வது சுலபமா! என டீசரை பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் கேள்விகள் தோன்றும் வண்ணம் அமைந்துள்ளது.

டிரெண்ட் லவ்டு தயாரிப்பில் வர இருக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் வெளியீடு பற்றிய தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படமும் ஒடிடியிலா! என்ற மக்களின் கேள்வி எங்களின் செவியிற்கு எட்ட; வேறு எந்த வழியும் இல்லை என்பதே எங்களின் பதில். பாதுகாப்புடன் நிம்மதியாக அவரவர் வீட்டிலிருந்து எல்லா படத்தையும் ஆரவாரத்துடன் மகிழ்வோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *