சினிமா பாடல்கள்

கடலோர கவிதைகள் படம் பாடல் அடி ஆத்தாடி…

கடலோரக் கவிதைகள் 1986ல் வெளியான தமிழ் மொழித் திரைப்படமாகும். இதில் சத்யராஜ், ரேக்கா, ராஜா, ஜனகராஜ் மற்றும் கமலா காமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் சுஹாசினி நடிப்பில் ”ஆராதனா” என்றும் கன்னடத்தில் B.C. பாட்டீல் மற்றும் பிரேமா ஆகியோரது நடிப்பில் ”கவுரவா” என்றும் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ரேக்கா மற்றும் ராஜா அறிமுகமான திரைப்படம் இதுவாகும்.  

சத்யராஜின் திரை வாழ்க்கையில் இத்திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது 200 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

அடி ஆத்தாடி…
அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அதுதானா

உயிரோடு

உறவாடும்

ஒரு கோடி ஆனந்தம்

இவன் மேகம் ஆக யாரோ காரணம்

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி

மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ

இப்படி நான் ஆனதில்ல
புத்தி மாறிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல
மூக்கு நுனி வேர்த்ததில்ல

கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ …

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்
உண்ம சொல்லு பொன்னே என்னை, என்ன செய்ய உத்தேசம்

வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க ஆசப்பட்டு ஆவதென்ன

கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே …

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே
அதுதானா

உயிரோடு

உறவாடும்

ஒரு கோடி ஆனந்தம்

இவன் மேகம் ஆக யாரோ காரணம்

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே
சரிதானா

அடி ஆத்தாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *