கச்சத்தீவு திருவிழா..!! தமிழகத்தைச் சேர்ந்த 50 பேருக்கு மட்டும் அனுமதி..!!
இலங்கைக்குச் சொந்தமாக உள்ள கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய பக்தர்கள் 50 பேர் மட்டும் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
கச்சத்தீவு திருவிழா என்பது தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் இடையிலான கலாச்சார திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் இந்த திருவிழா, இந்த ஆண்டு மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதற்காக ஏற்கனவே இலங்கை அரசு அந்நாட்டை சேர்ந்த 50 பேருக்கு மட்டும் கலந்துகொள்ள அனுமதியளித்திருந்தது.
இந்நிலையில், தற்போது தமிழக பக்தர்கள் 50 பேருக்கு அனுமதியளித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கச்சத்தீவு திருவிழா பக்தர்களின்றி நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்ததால் தமிழர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த தலா 50 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.