காதல் படம் பாடல் வரிகள் உனக்கென இருப்பேன்…
காதல் (Kaadhal) திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றது. மேலும் இத்திரைப்படம் தென்னிந்திய திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதான பில்ம்பேரின் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
பாடல் வரிகள்:
உனக்கென இருப்பேன்…உயிரையும் கொடுப்பேன்….
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்கண்மணியே… கண்மணியே
அழுவதேன்…கண்மணியே……
வழித்துணையாய் நான் இருக்க
உனக்கென இருப்பேன்…உயிரையும் கொடுப்பேன்….
உன்னைநான்பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்ணீர் துளிகளை கண்கள்தாங்கும்……கண்மணி….
காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா…
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்….
என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா
மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்…..
நம் காதல் தடைகளை தாங்கும்
வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்…
நிலவொளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளிகொடுக்கும்….
மேலும் படிக்க : மண வயதை தொட்ட யாஷிகா ஆனந்த்
தந்தையையும் தாயையும் தாண்டிவந்தாய்… தோழியே…
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்
தோளிலே நீயுமே சாயும் போது…
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்
வெண்ணீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன்…
உதிரத்தில் உன்னை கலப்பேன்
விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்…
நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்…
நீ அழுதால் நான் துடிப்பேன்
உனக்கென இருப்பேன்…உயிரையும் கொடுப்பேன்….
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே…கண்மணியே
அழுவதேன்…கண்மணியே….
வழித் துணையாய் நானிருக்க
வழித் துணையாய் நானிருக்க
வழித் துணையாய் நானிருக்க
மேலும் படிக்க : மின்சாரக் கனவுக்கன்னியின் பிறந்தநாள்