சினிமாசினிமா பாடல்கள்

ஒரு மணி அடித்தால் கண்ணே…

காலமெல்லாம் காதல் வாழ்க (Kaalamellam kathal vazha) சிவசக்தி பாண்டியன் தயாரித்து ஆர். பாலு இயக்கி 1997 இல் வெளிவந்த தமிழ் காதல் படமாகும். இதில் முரளி கதாநாயகனாக நடிக்க அறிமுக நாயகி கெளசல்யா நாயகியாக உடன் நடித்துள்ளார். மேலும் ஜெமினி கணேசன், மணிவண்ணன், சார்லி மற்றும் விவேக் ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். இப்படம் 275 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

ஒரு மணி
அடித்தால் கண்ணே
உன் ஞாபகம் டெலிபோன்
குயிலே வேண்டும் உன்
தரிசனம் போதும் கண்ணே
நீ நடத்தும் நாடகமே தூங்கும்
போதும் தூங்கவில்லை உன்
ஞாபகமே பாடினால் அந்தப்
பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவது
ஏனடியோ

ஒரு மணி
அடித்தால் கண்ணே
உன் ஞாபகம் டெலிபோன்
குயிலே வேண்டும் உன்
தரிசனம்

வாசம் மட்டும்
வீசும் பூவே வண்ணம்
கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போலே எங்கும்
உன்னை தேடுகிறேன் நான்
தேடுகிறேன்

தேடி உன்னைப்
பார்த்துப் பார்த்து கண்கள்
ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே
மூழ்குகிறேன் நான்
மூழ்குகிறேன்

மேலும் படிக்க : மீண்டும் முந்தானை முடிச்சா!

வீசிடும் புயல்
காற்றிலே நான் ஒற்றைச்
சிறகானேன் காதலின் சுடும்
தீயிலே நான் எறியும்
விறகானேன்

மேடைத்தோறும்
பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு
வந்தால் நிம்மதியே
போதும் கண்ணே நீ
நடத்தும் நாடகமே
தூங்கும்போதும்
தூங்கவில்லை உன்

ஞாபகமே

ஓ ஒரு மணி
அடித்தால் கண்ணே
உன் ஞாபகம் டெலிபோன்
குயிலே வேண்டும் உன்
தரிசனம்

உந்தன் முகம்
பார்த்த பின்னே கண்
இழந்து போவதென்றால்
கண் இரண்டும் நான்
இழப்பேன் இப்போதே
நான் இப்போதே

உந்தன் முகம்
பார்க்கும் முன்னே
நான் மறைந்து
போவதென்றால் கண்கள்
மட்டும் அப்பொழுதும்
மூடாதே இமை மூடாதே

காதலே என்
காதலே என்னை
காணிக்கை தந்து
விட்டேன் சோதனை
இனி தேவையா சுடும்
மூச்சினில் வெந்து
விட்டேன்

காதல் என்னும்
சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் இன்று
போவது ஏன் போதும் கண்ணே
நீ நடத்தும் நாடகமே தூங்கும்
போதும் தூங்கவில்லை
உன் ஞாபகமே

ஒரு மணி
அடித்தால் கண்ணே
உன் ஞாபகம் டெலிபோன்
குயிலே வேண்டும் உன்
தரிசனம்

மேலும் படிக்க : சரவணன் மீனாட்சி சீசன் – 4.. என்னது இந்த ஜோடியா திரும்பவும் வராங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *