Videosசினிமா

கும்கி போய் காடன் வருவதை பாருங்க

விளையாட்டு வீரராக நகைச்சுவை நடிகர் பொது மனிதரா நகைச்சுவை மற்றும் வீரமான காவல் அதிகாரியை எனப் பல கெட்டப்பில் வந்த விஷ்ணு விஷாலின் தற்போது படப்பட்டியல் எல்லாம் கலந்த கலவையாக காத்திருக்கிறது. அந்த படம் பட்டியலை பார்க்கவே செமையா இருக்குங்க.

விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழுவில் களமிறங்கி அந்தப் படத்திலேயே பட்டையக் கிளப்பியதால் அறிமுக நடிகராக விருதுகளை தட்டிப் பறித்தார். ராட்சசன் படம் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம். இந்தப் படத்திற்கு முன்பு அவர் நடித்த பல படங்கள் வெவ்வேறு கதாபாத்திரத்தில் இருக்க இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலின் மறு முகத்தை கண்டறிய முடிந்தது.

ராட்சசன் படமே மற்றும் பல பட வாய்ப்புகளை விஷ்ணு விஷாலுக்கு குவித்தது என்று சொன்னாலும் மிகையாகாது. தற்போது காடன் எஃப். ஐ. ஆர். மோகன்தாஸ் போன்ற படங்கள் படப்பிடிப்பின் பாதியில் கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் இந்தப் படங்களின் புகைப்படங்கள் சிறுசிறு காணொளிகள் பரவி வருகின்றன. எஃப். ஐ. ஆர். படத்தில் தேடப்படும் குற்றவாளியாக சித்தரிக்கப்படுகிறார் விஷ்ணு விஷால். அதேபோல் மோகன்தாஸ் படத்தில் கண்ணாடி அணிந்த மனிதராக ஒரு சுத்தியை கொண்டு அடித்து கை சட்டை என அனைத்திலும் ரத்தமாக உள்ளது.

காடன் படத்தில் யானையுடன் சூப்பராக நடித்துவரும் காணொளையை பார்த்து ரசியுங்கள். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் யானையின் மீது ஒய்யாரமாய் காப்பி குடிக்கும் விஷ்ணு விஷால். இந்த ஏப்ரல் 2020ல் வெளியாக வேண்டிய காடன் படம் கொரோனா முடிந்து எப்போது வெளியாகும் என தெரியாமல் ரசிகர்களை ஏங்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *