கே.இ ஞானவேல் ராஜா பிறந்தநாள் வாழ்த்து
தமிழ் சினிமா : சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்த கே.இ ஞானவேல் ராஜா ஸ்டூடியோ க்ரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் பல வெற்றிப்படங்களை இன்று வரை தயாரித்து வெற்றியுடன் வலம் வந்த ஞானவேல் ராஜாவுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களை பிரபலங்கள் அனுப்பி வருகின்றனர்.
சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது திரைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஞானவேல் ராஜா. இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் கொண்டாடுகிறார்.
ஜூன் 30 இன்று இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை திரை பிரபலங்களும், நடிகர், நடிகைகளும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
திரைத்துறையில் எவ்வாறு பல படங்கள் வருவது போவது உண்டோ அதுபோல திரைப்படத் துறையிலும் பல தயாரிப்பாளர்கள் பல வெற்றிகளையும் பல தோல்விகளையும் தந்து வெற்றி தயாரிப்பாளராக பல ஆண்டுகள் நிலைத்து நிற்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
தொடர்ந்து வெற்றிப் படங்களை தயாரித்து வரும் ஞானவேல்ராஜா தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களை தெலுங்கு மொழியிலும், மொழி பெயர்த்து அதை அங்கு தானே வெளியிடும். அங்கேயும் தனது வெற்றிக் கொடியை நாட்டி வந்தவர்.
சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களை தெலுங்கில் மொழி பெயர்த்து, மிகவும் பிரபலமான இவருக்கு தெலுங்கு திரைப்படத் துறையில் மிகப் பெரிய நற்பெயர் கிடைத்துள்ளது.
கே.இ ஞானவேல் ராஜா பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பல நடிகர், நடிகைகள், நண்பர்கள் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும், தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.
கே.இ ஞான வேல் ராஜா திறமைசாலியாகவும், ஒவ்வொரு திரைப்படங்களிலும் அதன் கதைகளை பார்த்து, பார்த்து தேர்ந்தெடுத்து மக்கள் இதை கண்டிப்பாக ரசித்து பார்ப்பார்கள், என்று தயாரித்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் திரைப்படத்துறையில் இன்றுவரை வெற்றி ஒரு முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர்.
சில்லுனு ஒரு காதல், மெட்ராஸ், பருத்திவீரன், நான் மகான் அல்ல, அட்டகத்தி, இருட்டுஅறையில் முரட்டு குத்து, போன்ற எண்ணற்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை பெற்றது,
வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி, சரத்குமார் நடித்து வரும் காட்டேரி என்ற படத்தை தயாரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.