சோமவாரத்தில் ஜோதிலிங்க தரிசனம்
சோமவாரத்தில் சிவதரிசனம் சாலச்சிறந்தது. ஜோதிர்லிங்க தரிசனத்தில் அடுத்து நாகேஸ்வரம் என்று சொல்லப்படும் அவுண்டா நாகநாதம் பற்றி காணவிருக்கிறோம்.
"தேடிக் கண்டு கொண்டேன் - திரு மாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்" -திருநாவுக்கரசர்
அவுண்டா நாகநாதம்
மஹாராஷ்டிர மாநிலத்தில் பர்பானி மாவட்டத்தில் அவுண்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது நாகேஷ்வரம். ஆகையால் அவுண்டா நாகநாதம் என்றும் குறிப்பிடுவர்.
ஸ்தல வரலாறு
தாருகன் தாருகை என்னும் அரக்கத் தம்பதியர் வனப்பகுதியில் ஆட்சி புரிந்து வாழ்ந்து வந்தனர். தாருகை பார்வதி தேவியிடம் பறக்கும் வரம் பெற்றவள். அவர்களின் பெயரைக்கொண்டே அவ்வனம் தாருகாவனமாயிற்று. தாருகியின் வரத்தால் அவ்வனத்தை நிலப்பரப்பிலிருந்து நடு கடலிற்கு எடுத்துச்சென்று தீவு போன்ற தோற்றத்தோடு அமைத்து அசுரக்கூட்டம் மட்டுமே அங்கு வாழ்ந்தனர்.
வரம் பெற்ற அரக்கர்கள் அட்டூழி்யம் செய்யாமல் வாழ்வது வாய்ப்பில்லாத நிதர்சனம். அது போல் ஒரு நாள் கப்பல் நிறைய பொது மக்கள் இத்தீவை அடைந்தனர் அவர்கள் அனைவரையும் சிறையிலிட்டு துன்புறுத்தினான் தாருகன். அதில் ஒருவன் சுப்ரியன் என்னும் வைச்யன், சிவபெருமானை பற்றி அனைத்தும் அறிந்து அவரால் தான் தன்மை காப்பாற்ற முடியும் என்று மானசீகமாக வழிப்பட்டான். வழிப்பட்ட பின்பு தான் தண்ணீர் அருந்தவோ உணவு உண்ணவோ செய்வான். இவன் வழிபடுவதை கண்ட தாருகன் இவனை கொல்லும் பொருட்டு ஆயுதத்துடன் வந்தான் அச்சமையம் பாம்பு பொந்துப் போன்ற இடத்திலிருந்து பேரொளி தோன்றிற்று அதிலிருந்து எம்பெருமான் வெளிப்பட்டு தாருகனை கொன்றார்.
அதனை அறிந்த தாருகை பார்வதியை வணங்க அம்மையும் காட்சியளித்து ‘நீ வேண்டுவது என்ன?’ என வினவினார். ‘அரனின் தோற்றத்தை கண்டு அஞ்சியே உம்மை அழைத்தேன் தாயே. என் குலம் அழியாமல் காக்க வேண்டும்’ என்று கேட்டாள். அம்மையும் அதற்கு ஒப்புக்கொண்டு சிவபெருமானிடம் கேட்க ‘இனி இந்த வனப்பகுதியில் அசுரர்களோடு மற்றவரும் (பிரமணர், க்ஷத்திரியர், வைச்யர், சூத்திரர்) வாழ்வார்கள். அனைவரையும் காக்க நாமும் இங்கே இருப்போம்’ என்று கூறி ஜோதியாக மாறி லிங்கம் நாகேஷ்வரராகவும் அங்கு வந்து தேவியும் நாகோஷ்வரியாகவும் அருள்பாளிக்கின்றனர். இப்பெயரிற்காண காரணம் அவர் பாம்பு புற்றிலிருந்து தோன்றியதேயாகும் . பிறகு இறைவனின் பெயரை கொண்டு தாருகாவனத்திலுள்ள கோவிலிருக்கும் பகுதி நாகேஷ்வரம் ஆயிற்று.
சிறப்பம்சம்
நாற்புறமும் மதில் சுவருடன் பரந்த இடமாக திகழும் இத்திருக்கோவிலுக்கு கிழக்கிலும் வடக்கிலும் வாயில்கள் அமைந்துள்ளது. அதில் வடக்கு வாயில் மட்டுமே பெரிதாகவும் புழக்கத்திலும் உள்ளது. அதன் வழியாக உள்ளே சென்றால் கருவறையாக ஒரு மேடையுள்ளது அதன் இடப்பக்க மூலையில் ஓர் சுரங்கப்பாதை வழியில் சென்றால் தான் மூலவர் நாகேஷ்வரரை தரிசிக்க மூடியும். அந்த சுரங்கப்பாதை 4*4 என்ற சதுரங்க வடிவிலிருப்பதால் நம் பயணம் சற்று சிரமமாக இருக்கும். நம் உடல் தகுதியை அவரை அங்கு தரிசித்து வெளி வருகையில் அறியலாம்.
மேலும் படிக்க : சனி பார்வையை யோகமாக மாற்ற செய்ய வேண்டியவை
கோவிலிலுள்ள தீர்த்தங்கள்
- பீம தீர்த்தம்
- கோடி தீர்த்தம்
- நாக தீர்த்தம்
அவன் அருளாளே அவன் தாள் பணிவோம்!
ஜோதிர்லிங்க தரிசனங்கள் தொடரும்.